Home » இமான் பிரச்சினையால் சிவகார்த்திகேயன் ஆடிய நாடகம்… பிரபலம் அம்பலப்படுத்திய உண்மை

இமான் பிரச்சினையால் சிவகார்த்திகேயன் ஆடிய நாடகம்… பிரபலம் அம்பலப்படுத்திய உண்மை

by ftcnc
0 comment 1.1K views

நடிகர் சிவகார்த்திகேயன் தீபாவளி அன்று வெளியிட்ட புகைப்படம் குறித்த உண்மை தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்

இசையமைப்பாளர் இமான் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் சகோதரர்கள் போன்று வலம்வந்த நிலையில் இருவரும் எதிரெதிர் துருவத்தில் நிற்கின்றனர்.

இமான் தனது முதல் மனைவியை பிரிந்ததற்கு காரணம் சிவகார்த்திகேயன் என்று கூறப்பட்டுள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சர்ச்சை தற்போது சற்று ஓய்ந்துள்ள நிலையில், தனது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் சிவகார்த்திகேயன் கொண்டாடி புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார்.

தற்போது இந்த புகைப்படத்திற்கு பின்னால் இருக்கும் உண்மையை சினிமா விமர்சகர் பிஸ்மி விமர்சனம் செய்துள்ளார்.

விமர்சனம் என்ன?

இமான் இப்படியொரு பிரச்சினையை ஏற்படுத்தியிருந்தாலும் தனது குடும்பத்துடன் எந்தவொரு மனஸ்தாபம் இல்லாமல் இருக்கின்றோம் என்பதை வெளிக்காட்டவே இதனை வெளியிட்டுள்ளாராம்.

ஆனால் கண்டிப்பாக சிவகார்த்திகேயன் குடும்பத்தில் அவருக்கும், அவரது மனைவிக்கு நிச்சயம் பிரச்சினை ஏற்பட்டிருக்கும் என்றும், அது நீண்ட காலம் எடுத்துக் கொள்ளாமல் சமாதானமாக போயுள்ளனர். வெளியுலகத்திற்கு ஒற்றுமையாக இருப்பது போன்று காட்டவே இப்புகைப்படத்தை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார் என்று பிஸ்மி உண்மையை உடைத்துள்ளார்.

என்னதான் சர்ச்சைகளை சந்தித்தாலும், சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து தனது நடிப்பில் கொடி கட்டி பறந்து வருகின்றார். தற்போதும் தனது கையில் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார்.

You may also like

Leave a Comment