நம் வீட்டின் மிக முக்கிய இடம் பூஜை அறை.அந்த பூஜை அறையில் ஒரு சில பொருட்களை தரையில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருக்கும்.

ஒரு சிலர் வீடுகளில் நித்திய பூஜை செய்வார்கள். ஒரு சிலர் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் மட்டும் விளக்கேற்றி பூஜை செய்வார்கள்.

பூஜை செய்யும் போது ஒரு சில பொருட்களை தரையில் வைத்தால் அது ஆபத்தையும், துரதிஷ்டத்தையும் ஏற்படுத்தும்.

தரையில் வைக்கக்கூடாத பொருட்கள்
ஒரு சிலர் வீட்டில் சிவலிங்கத்தின் விக்ரகங்களை வைத்திருப்பார்கள். சிவலிங்கத்தின் விக்ரகங்களை பயபக்தியுடன் வைத்திருக்க வேண்டும்.ஒ

ஒரு சிலர் சிவலிங்கத்தின் விக்ரகங்களை வீட்டில் வைத்திருக்க மாட்டார்கள். ஏனெனில் விக்ரகங்களுக்கு தொடர்ந்து அபிஷேகமும், நெய் வேதியமும் தவறாமல் செய்யவேண்டும்.

அப்பேற்பட்ட சிவலிங்கத்தை தரையில் வைக்கக்கூடாது. தட்டு அல்லது மரப்பலகையின் மேல் வைத்து வழிபட வேண்டும்.

லட்சுமியின் அம்சமான வலம்புரி சங்கு அனைவரது வீட்டிலும் இருக்கவேண்டும். அந்த சங்கை தரையில் வைத்து வழிபடக்கூடாது.

பட்டுத்துணி விரித்து அரிசி பரப்பி அதன் மேல் சங்கை வைத்து சரியான முறையில் வழிபட்டால் பண பிரச்சனைகள் நீங்கும்.

தினமும் பூஜை அறையில் ஏற்றும் விளக்கை தரையில் வைத்து ஏற்றக்கூடாது. தட்டு அல்லது பட்டுத்துணி விரித்து அதன் மேல் வைத்து ஏற்றி வழிபடவேண்டும்.

இந்த 3 பூஜை பொருட்களையும் தரையில் வைத்து வழிபட்டால் துரதிஷ்டம் நம்மை துரத்தும் என்று சாஸ்திரம் கூறுகிறது.