உலக நாடுகள் அத்தனையையும் கரோனா உலுக்கி எடுத்துவருகிறது. கரோனாவில் இருந்து தப்பிக்க சானிட்டைசரைப் பயன்படுத்தி அடிக்கடி கைகளைக் கழுவிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் சானிட்டைசரை நாம் கடையில் போய் வாங்குவதை விட வீட்டிலேயே செய்யும் சூப்பர் டிப்ஸ் இதோ..

தேனியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தான் இதை தயாரித்து வருகின்றனர். தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் கொட்விலார்பட்டிப் பகுதியில் இயங்கும் புதுமை மகளிர் சுய உதவிக்குழுவுக்கு இதுதொடர்பாக பயிற்சி அளித்துள்ளது. இந்தக்குழு விட்டமின் இ திரவம் மற்றும் கற்றாழைச்சாறு கலந்து தயாரிக்கப்படும் கை கழுவும் திரவம், அரை லிட்டர் பாட்டில் 45 ரூபாய்க்கு தயாரித்து விற்கிறார்கள். இதில் கற்றாழை சாறு சேர்ப்பதால் தோலுக்கும் எந்த ஆபத்தும் வராது.

இந்த குழுவினர் இதுவரை 1500 லிட்டர் ஆர்டர் பெற்றுள்ளனர். தேனியில் உள்ள ஜி.ஐச்சில் இவர்களது ஹேண்ட் வாஸ் தான் பயன்படுத்தப்படுகிறது. சரி நீங்களும் வீட்டிலேயே ஹேண்ட் தயாரிக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ் இதோ..இதற்கு பழைய சோப்பும், கொஞ்சம் எழுமிச்சைப்பழமுமே போதும். எப்படி செய்ய வேண்டும் என டிப்ஸ் இதோ..வீடியோவைப் பாருங்க..