கெட்ட கொழுப்பு ஈஸியா குறைக்கனுமா? தினமும் இவற்றை சாப்பிட்டாலே போதுமாம்!

405

இன்றைய சூழ்நிலையில் அனைவரும் வயது பேதமின்றி அடிமையாகி கிடப்பது கெட்ட கொழுப்புகளை உண்டாக்கும் உணவு வகைகளின் மீதுதான்.

எண்ணெயில் வறுத்த, பொரித்த அசைவ மற்றும் க்ரிஸ்பி உணவுகள் அனைத்துமே உடலில் அதிக கொழுப்புகளை உண்டாக்கி அதை வெளியேற செய்யாமல் உடல் பருமனுக்கு உள்ளாக்கிவிடுகிறது.

இவை தவிர ஐஸ்க்ரீம், பேக்கரி வகைகள், தொடர்ந்து சாக்லெட், வெள்ளை சர்க்கரை கலந்த இனிப்பு வகைகள், முட்டையின் மஞ்சள் கரு, கோழி, ஆடு,மாடு, பன்றி இறைச்சி வகைகள் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து எடுக்கும் போது இதிலிருக்கும் கொழுப்புகள் கல்லீரலில் வேகமாக கொழுப்பாக மாறி இரத்தத்தில் கலந்து உட லில் இருக்கும் கெட்ட கொழுப்புகளின் அளவை மிகுதியாக்கிவிடுகிறது.

இதிலிருந்து எளிதில் விடுபட வேண்டுமாயின் கொழுப்பை குறைக்கும் உணவு வகைகளை தேர்வு செய்து உண்ணுவது அவசியமானது ஆகும். அந்தவகையில் தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

இரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவு அதிகமாக இருந்ததை கண்டறிந்தால் ஆலிவ் ஆயில் பயன்படுத்தி உணவை சமைக்கலாம்.

தினமும் காலையில் இரண்டு பல் பூண்டை தோல் உரித்து பச்சையாக சாப்பிடலாம். வெறும் பூண்டு அசிடிட்டி உண்டாக்கும் என்பவர்கள் பூண்டுடன் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து அரைத்து தூள் செய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சரியாகும்.

பாதாமின் பக்கவிளைவுகள் இவ்வளவா ...

பாதாம் கொட்டையை நாளொன்றுக்கு 3 முதல் 5 கொட்டைகள் வரை சாப்பிட்டாலே போதுமானது.

ஓட்ஸ் மற்றும் பார்லி இரண்டும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை 7% வரை குறைக்க உதவுகிறது. மேலும் இவை இரண்டுமே ரத்த ஓட்டத்தின் போது கொழுப்பு உறிஞ்சப்படுவதையும் தவிர்க்கும். ரத்தத்தில் கொழுப்பு மிதமிஞ்சி இருப்பவர்கள் தினசரி ஒரு வேளை இதை எடுத்துவந்தால் கெட்ட கொழுப்பின் அளவு கணிசமாக கரையக்கூடும்.

அதிக கொழுப்பு மற்றும் உடல் எடை அதிகம் கொண்டவர்கள் தினசரி ஒரு அவகேடோ சாப்பிட்டு வந்ததில் அவர்கள் சாதாரண டயட் மேற்கொண்டவர்களை காட்டிலும் அதிக அளவு கெட்ட கொழுப்பை குறைக்கும்.

ஒமேகா 3 அதிகம் கொண்டிருக்கும் மீன் சாப்பிட்டு வரலாம்.

நார்ச்சத்து தாதுக்கள் புரதங்கள் நிறைந்த பருப்பு வகைகள்,சிட்ரஸ் நிறைந்த பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, சோயா உணவுகள்,காய்கறிகளில் வெண்டைக்காய், கத்திரிக்காய், கேரட் போன்றவையும் எடுத்துகொள்ளலாம்.