1.4K
சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருப்பவர் தான் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.
மற்ற ஹீரோக்களுடன் ஒப்பிடும் போது மிகவும் எளிமையாக காணப்படுவார். திரைப்படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பெரிதாக கலந்து கொள்ள மாட்டார்.
ஒரு படத்தில் பார்த்தால் இவரை இன்னொரு படத்தில் தான் பார்க்க முடியும்.
அந்த வகையில் நடிகர் அஜித்தின் சிறு வயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள் திகைத்து போயுள்ளார்கள். மேலும் “ இவர் தான் எங்கும் வர மாட்டாரே இந்த புகைப்படம் எப்படி கிடைத்தது..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.