தற்போதைய காலத்தில் உடம்பில் பச்சை குத்திக்கொள்வது என்பது சாதாரணமான ஒரு விடயமாக பார்க்கப்படுகிறது. ஆண்கள் பெண்கள் என்று வேறுபாடின்றி தங்கள் உடம்பில் தங்களுக்கு பிடித்தமான நபர்களின் பெயரையோ அல்லது உருவங்களையோ பச்சை குத்திக்கொள்வது வழக்கமான ஒன்றாக கருதப்படுகின்றது.
இந்த அடிப்படையில் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய காதலரின் பெயரை தன் நெற்றியில் பச்சைக் குத்திக் கொண்ட காணொளி மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.
குறித்த இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளதுடன் அது தொடர்பாக பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தும் வருகின்றனர்.
பச்சை குத்திய சந்தர்ப்பத்தில் குறித்த பெண் வலியை உணர்ந்தும் அதனை தனது காதலனுக்காக பொறுமையுடன் அதனை செய்து முடித்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் தான் இந்த முடிவை எடுத்ததை நம்பவே முடியவில்லை என்றும் இது தொடர்பில் ஆச்சரியமடைவதாகவும் ‘ஒவ்வொரு முறை கண்ணாடியில் தன்னைப் பார்க்கும் போதெல்லாம் தன்னுடைய காதலனைப் பார்ப்பதாக உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram