இன்று செல்போன் இல்லாத வீடுகளே இல்லை. முன்பெல்லாம் வீட்டு பி.எஸ்.எல்.எல் போன்கள் மட்டும் தான் இருந்தது. அதுவும் கூட ஒரு தெருவுக்கே ஒன்று, இரண்டு வீடுகளில் தான் இருக்கும். பக்கத்து வீடுகளுக்கு போன் வந்தால் ஓடுபவர்கள் அதிகம் பேர் உண்டு. இப்போது அனைவரது கையிலும் செல்போன் இருக்கிறது. அதிலும் செல்போனின் கவரில் அழுக்கு படிந்ததும் நாமெல்லாம் உடனுக்குடன் மாற்றிவிடுகிறோம். அப்படி மங்கிப்போன உங்கள் செல்போன் கவரை வீட்டில் இருக்கும் சில பொருள்களை வைத்தே புதுசுபோல் மாற்றிவிடலாம். இதோ இதற்கான சூப்பர் டிப்ஸ் இதோ..

முதலில் ஒரு டப்பாவில் உங்கள் செல்போன் கவரை போட்டுக்கொள்ள வேண்டும். அதன் மேல் 2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை தூவ வேண்டும். இப்போது இதன் மேல் ஒரு கப் அளவுக்கு வினிகர் ஊற்ரவேண்டும். இப்போது சோடா உப்பும், வினிகரும் சேர்ந்து நுரைந்துவரும்.

இப்போது தண்ணீருக்கு மேல் டப்பாவின் மேல் பகுதியை நோக்கி உங்கள் செல்போன் அவர் வருவதைத் தடுக்கும்வகையில் மேல் ஒரு டம்ளரை வைக்கவேண்டும். இரண்டு மனிநேரங்களுக்கு பின்பு பருங்கள். மங்கலான உங்கள் செல்போன் கவர் புதுசுபோல் ஜொலிக்கும்.