கடந்த மாதம் டிக்டொக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடைவிதித்திருந்த நிலையில் மேலும் 47 செயலிகளுக்கு இந்தியா தடைவிதித்துள்ளது.

இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையில் வன்முறை, அபாயகரமான நேருக்கு நேர் ஏற்பட்ட பின்னர் லடாக் எல்லை பதட்டங்கள் தொடர்ந்ததால், 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடைவிதித்தது.

இந் நிலையில் மேலும் 47 சீன செயலிகளுக்கு தடைவிதிக்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ள 47 செயலிகளின் பெயர்கள் விரைவில் வெளிப்படுத்தப்படும் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த செயலிகளின் பயன்பாடு இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இன்னும் 275 சீன செயலிகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், இந்த செயலிகளின் தகவல் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இவற்றுக்கும் தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

PUBG தடையா?
சீனாவின் முக்கிய இணைய நிறுவனமான டென்சென்ட்டால் ஆதரிக்கப்படும் பிரபலமான கேமிங் பயன்பாடான PUBG, ஷியோமியின் ஜில்லி, ரிக்ஸோ மற்றும் பைட் டான்ஸ் மற்றும் சீன இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் அலிஎக்ஸ்பிரஸ், யுலைக், ரெஸ்ஸோ போன்ற செயலிகளையும் இந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது.

PUBG இன் மிகப்பெரிய சந்தை இந்தியாவும் தான். செயலிகள் நுண்ணறிவு நிறுவனமான சென்சார் டவரின் மதிப்பீடுகளின்படி, PUBG இன்றுவரை சுமார் 17.5 கோடி நிறுவல்களை கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் ரேடாரில் உள்ள பயன்பாடுகளில் ஷியோமியின் 14 Mi செயலிகளும், கேப்கட் மற்றும் ஃபேஸ்யு போன்ற குறைவாக அறியப்பட்ட செயலிகளும் உள்ளன. மற்ற சீன இணையம் மற்றும் தொழில்நுட்ப மேஜர்களான மெய்ட்டு, LBE டெக், பெர்ஃபெக்ட் கார்ப், சினா கார்ப், நெடீஸ் கேம்ஸ், யோசூ குளோபல் ஆகியவற்றின் செயலிகளும் அரசாங்க ரேடரின் கீழ் உள்ளன.

கூடுதலாக, இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த பயன்பாடுகளிலிருந்து சீனாவிற்கு தரவுகள் பகிரப்படுகிறதா என்பதையும் அரசாங்கம் ஆராய்கிறது.

தடை செய்யும் குழு
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeiTy) அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுபோன்ற தடையை விதிக்கும் முன் இந்த மையம் உரிய வழிமுறைகளைப் பின்பற்றும் என்றார். “இதற்கென தனியே ஒரு செயல்முறை உள்ளது, இதுபோன்ற தடை உத்தரவுகளுக்கு ஒரு குழு உள்ளது. அவர்களிடம் உத்தரவு கிடைத்தால் மட்டுமே, MeitY செயல்படும்” என்று அந்த அதிகாரி கூறினார்.

எனவே, தடைச்செய்யப்பட்ட முழுமையான செயலிகளின் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.