‘எல்லாருக்கும் பிரண்ட்..இப்போ மாறிப்போச்சு டிரெண்ட்’ என்று ஏகன் திரைப்படத்தில் வரும் பாடல்வரியைப் போல எல்லாருக்கும் பிடித்தவராக இருப்பதே தனிக்கலை. ஆனால் அது அனைவருக்கும் வாய்த்துவிடுவதில்லை. சிலர் அனைவருக்கும் பிடித்தவராக இருக்க அவரது ராசியே முக்கியக் காரணமாகிவிடுகிறது.

அப்படியான ராசிக்காரர்களைப் பற்றி இதில் பார்ப்போம்..

கும்பம்..

இவர்களது குணத்தினால் அனைவருக்கும் இவர்களை பிடிக்கும். யாரையும் தவறாக நினைக்காத இவர்கள் அனைவரிடமும் இருக்கும் நல்லகுணத்தை மட்டும் எடுத்துக்கொள்வார்கள். தென் தேவைக்காக மற்றவர் யாரையும் சார்ந்திருக்கக் கூடாது. இவர்களது சிந்தனைத்திறன் மற்றவர்களையும் இவர்களை நோக்கி இழுத்துவிடும்.

சிம்மம்

இவர்கள் தங்களது ஆற்றலால் மற்றவர்களை தன் வசப்படுத்துவார்கள்.இவர்களது அதீத தன்னம்பிக்கை சுற்றியிருப்போருக்கும் ஊக்கம் அளிக்கும். அதனாலேயே இவர்களுக்கு புகழ் கூடுதல் கிடைக்கிறது. இவர்களது நம்பிக்கை மற்றவருக்கும் ஊக்கம் ஏற்படுத்தும். இவர்களது ஆளுமை, இரக்க குணம், தாராள மனம் ஆகியவை மற்றவர்களுக்கு இவர்களை பிடித்தவர்கள் ஆக்குகிறது.

தனுசு

கற்பனைக்கு எட்டாத நகைச்சுவைதிறன் இவர்களை அனைவருக்கும் பிடித்தவர்கள் ஆக்குகிறது.அதீத நம்பிக்கை கொண்ட இவர்கள் அருகில் இருப்பது, உலகமே அருகில் இருப்பதுபோன்ற உணர்வைத்தரும்.

துலாம்

வாதாடவும், ஆதரவாகவும் இவர்கள் மற்றவர்களுக்கு இருப்பதால் அனைவருக்கும் இவர்களைப் பிடிக்கும். இவர்களது விஸ்வாசம்தான் மற்றவர்களுக்கு இவர்களைப் பிடிக்கக் காரணம். இவர்களது வசீகர எண்ணம் இவர்களை அனைவருக்கும் பிடித்தவர்களாக்கும்.

மிதுனம்

பார்க்க வேடிக்கையான செயல்களை செய்யும் இவர்கள் தேவைப்படும் நேரத்தில் அதீத புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்கள். இவர்கலுடன் இருக்கும் போது வாழ்வே கொண்டாட்டமாக நகரும். இவர்கள் அருகில் இருக்கும்போது அனைத்தும் வேடிக்கையாக நிகழ்வதால் எல்லாருக்கும் இவர்களைப் பிடிக்கும்.

மேஷம்

இவர்களது சாகசமும், கட்டுப்பாடில்லாத கற்பனைத்திறனும் இவர்களை அனைவருக்கும் பிடிக்கக் காரணம். இவர்கள் வாழ்வில் வெற்றிபெற அனைத்துவழியிலும் முயல்வார்கள்.இந்த வெற்றியாளர்களை அனைவருக்கும் பிடிக்கவும் செய்யும்.