அமெரிக்க நாட்டில் ஒரு நபர் தனக்குக் கிடைத்த ரூ 128 கோடி லொட்டரி பரிசுத்தொகையை தான் கொடுத்த வாக்குறுதியின் படி 28 ஆண்டுகளுக்கு பின் நிறைவேற்றியுள்ளார்.

அமெரிக்கா நாட்டில் வசித்து வந்த டாக் கும் மற்றும் ஜோசப் பீனி ஆகிய இருவரும் நண்பர்கள்.

கடந்த 1992ம் ஆண்டு இருவரும் ஒரு உடன்படிகை செய்து கொண்டனர். அதன்படி இருவரில் யாருக்கும் லொட்டரி சீட்டில் பரிசுத் தொகை கிடைத்தாலும் அதை இருவரும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையி 28 ஆண்டுகள் கழித்து கடந்த மாதம் டாம் கும் என்பவருக்கு லொட்டரியில் சுமார் ரூ.128 கோடி பரிசு கிடைத்துள்ளது.

தான் ஏற்கனவே தனது நண்பனுடம் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி ஜோசப் பீனிக்கு ரூ 64 கோடியை அவரிடம் கொடுத்து நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்து எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.