Home » திருமண விழாவில் தவில் வாசித்து அசத்திய இளம்பெண்

திருமண விழாவில் தவில் வாசித்து அசத்திய இளம்பெண்

by ftcnc
0 comment 1.3K views

திருமண விழாவில் தவில் வாசித்து அசத்திய இளம்பெண் ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

திருமணங்களில் முக்கியமான வாத்தியம் தவில். பெரும்பாலான திருமணங்கள் தவில் வாத்தியத்தின் போது தான் நடைபெறும். கெட்டி மேளம் என்று சொன்னவுடன் இசைக்கப்படும் தவிலுக்கு திருமணத்தில் முக்கிய பங்கு உண்டு. அந்த இசையை பெரும்பாலும் ஆண்களே அதிகம் விசைத்து வருகின்றனர். இங்கே ஒரு திருமணத்தில் பெண் ஒருவர் தவில் இசைத்த வீடியோ தான் இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். தங்கள் திறமைகளை அனைத்து துறைகளிலும் வெளிப்படுத்தி பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் தான் ஒரு இளம் பெண் தவில் இசைத்து அசத்திய வீடியோ இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகிய பரவி வருகிறது. இணையவாசிகள் பலரும் அந்த பெண்ணின் திறமையை பாராட்டி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இணையவாசிகளை கவர்ந்த அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இதோ…

You may also like

Leave a Comment