Home » கலைக்கு என்றுமே தலைவணங்கும் ரசிகர்கள்… எவர் கிரீன் பாடலை தவில் இசையில் கொண்டுவந்த கலைஞ்சர்கள்..!

கலைக்கு என்றுமே தலைவணங்கும் ரசிகர்கள்… எவர் கிரீன் பாடலை தவில் இசையில் கொண்டுவந்த கலைஞ்சர்கள்..!

by ftcnc
0 comment 871 views

கேட்டாலே புல் அரிக்கும் பாடல் என 90-ஸ் கிட்ஸ்களின் பிடித்தமான பாடலான கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் பாசமுள்ள பாண்டியரே பாடல் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றவை. இது கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 100வது படம். 1991-ம் ஆண்டு வெளிவந்த கேப்டன் பிரபாகரன் படத்தில் கேப்டன் விஜயகாந்த் கதாநாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில், சரத்குமார், மன்சூர் அலிகான், கலாபவன் மணி, எம்.என்.நம்பியார், லிவிங்ஸ்டன், ரூபினி , ராஜமாதா ரம்யா கிருஷ்னன், காந்திமதி போன்ற திரை நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம். இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் மக்களுக்கு பிடித்தமான பாடல்கள் ஆகும். அதற்கு காரணம் மாஸ்ட்ரோ இளையராஜா இசையில் அமைப்பில் உருவான படம்.

இனிமேல் இப்படி ஒரு பாடல் வரப்போவதில்லை என ரசிகர்கள் ஆதங்கப்படும்…… இந்த பாடலை மனோ-சித்ரா குரலில் இனிமையாக பாடியிருப்பார்கள். இந்த பாட்டிற்கு ராஜ மாதா ரம்யா கிருஷ்ணன் மற்றும் லிவிங்ஸ்டன் நடனம் ஆடியிருப்பார்கள். இந்த பாடல் ஒலிக்காத ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இருக்காது. 90-ஸ் கிட்ஸ்களின் பாடல்கள் ப்ளேலிஸ்ட்டில் நிச்சயம் இந்த பாடல் இடம்பெற்றிருக்கும். 31 வருடங்களாக ரசிகர்களின் மனதில் இடம்பெற்ற பாடலை மேளம் இசைக்கும் கலைஞர்கள் தவில் அடித்து நாதஸ்வரத்தில் பாடிய இந்த பாடல் தற்போது வைரல் ஆகி வருகிறது.

தவிலில் 90-ஸ் கிட்ஸ் ஒருவர் மேளம் கொட்ட இன்னொரு 90-ஸ் கிட்ஸ் நாதஸ்வரத்தில் பாட்டிசைக்க ரசிகர்கள் படம் பிடித்து இணையத்தில் பதிவிட தற்போது அந்த பாடல் 2கே-கிட்ஸ்களிடமும் பிரபலம் அடைந்து வருகிறது. அந்த காணொளியை இங்கே..

You may also like

Leave a Comment