தீபாவளி சிறப்பு பரிசாக கமல் போட்டியாளர்களுக்கு ஒரு டுவிஸ்ட் கொடுக்கவுள்ளார்.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பியில் முதல் இடத்தில் சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய ஆறு சீசன்களை சிறப்பாக முடித்து விட்டு தன்னுடைய ஏழாவது சீசனில் இருக்கின்றது.
இந்த சீசனில் மற்ற சீசன்களை போல் பிரபலங்கள், மீடியாவில் தேர்ச்சி பெற்றவர்கள், சின்னத்திரை பிரபலங்கள் உள்ளிட்ட துறைகளில் உள்ளவர்கள் போட்டியாளர்களாக இருக்கின்றார்கள்.
அந்த வகையில், கவின் நண்பரும் மீடியாவில் எதையாவது சாதிக்க வேண்டும் என பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிரதீப் கடந்த வாரம் ரெட் கார்ட்டுடன் வெளியேற்றப்பட்டார்.
இதற்காக வீட்டிலுள்ள பெண் போட்டியாளர்கள் அவர் இருப்பதால் பாதுகாப்பு இல்லை என்ற சதி பழியை அவர் மேல் சுமத்தினார்கள்.
இந்த நிலையில் பிரதீப்பை வெளியேற்றி விட்டதால் பிரச்சினை சமூக வலைத்தளங்களில் வெடித்து கொண்டிருக்கின்றது.
தீபாவளி பரிசு
நிகழ்ச்சிக்குள் வைல்ட் கார்ட் என்றியாக வந்த அர்ச்சனா பிரதீப்பிற்காக நியாயமாக விளையாடி வருகின்றார்.
இவர் இருந்தால் கண்டிப்பாக டைட்டில் வின்னர் கொடுக்கலாம் என ரசிகர்கள் முடிவு செய்து விட்டார்கள்.
அந்த வகையில் இந்த தடவை தீபாவளி பரிசாக போட்டியாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கின்றது.
அதாவது வெளியில் சென்ற பிரதீப் மீண்டும் போட்டிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது. அத்துடன் இவர் வெளியில் சென்று அனைத்தையும் பார்த்து விட்டதால் சிறப்பு விருந்தினராக சரி வரலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இது போட்டியாளர்களுக்காக என கமல் கூறியுள்ளார். ஆனால் கொளுந்து விட்டு எறியும் நெருப்பை அனைக்க கமல் செய்யும் திட்டம் என்பது ரசிகர்களுக்கு இதுவரையில் புரியவில்லை.
இந்த செய்தி தீயாய் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.