இலங்கை மின்கட்டணம் தொடர்பில் வெளியான பகீர் தகவல்

1313

தற்போது மின் பாவனையாளர்கள் பலருக்கு வழங்கப்பட்டுள்ள மின் கட்டண பட்டியலில் அதி கூடிய தொகை குறிப்பிடப்பட்டிருப்பது கவனக் குறைவினால் ஏற்பட்ட ஒன்று என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அவர், அதி கூடிய கட்டணங்கள் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மின்சார சபையின் கவனயீனத்தினாலேயே இந்த தவறு நடந்துள்ளது. எனவே அவ்வாறு வழங்கப்பட்டுள்ள மின் கட்டண பட்டியல்களை திருத்தி மீள வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.