எலும்புகள்தான் ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம் என்றே கூறலாம்.
நாம் நிற்க, அமர, நடக்க, ஓட என துடிப்பான எந்தச் செயலைச் செய்யவும் எலும்புகள் உறுதியாக இருப்பது அவசியம்.இதனை வலுவாக வைத்து கொள்வது நமது கடமை ஆகும்.
எலும்பை வலுவாக்கும் கால்சியமும், வைட்டமின் டி சத்தும் எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்திருக்கிறோம். அது போன்று எலும்பை மோசமாக்கும் உணவு வகைகள் குறித்தும் தெரிந்துவைத்துகொள்வது அவசியம்.
தற்போது அந்த மோசமான உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
காபி
எலும்புகள் வலுவிழப்பதில் காபி பானம் முக்கியமானதாக கருதப்படுகிறது. தினமும் 2 கப் காபி போதுமானது. அவை அதிகமானால் காபியில் இருக்கும் பொருள்கள் கால்சியம், இரும்பு, துத்தநாக சத்தை உடலில் சேரவிடாமல் தடுக்கிறது.
நீங்கள் அதிக அளவில் காஃபி குடிப்பவர்களாக இருந்தால் படிப்படியாக குறைத்து கொள்ளுங்கள். இல்லையெனில் இதில் இருக்கும் கேஃபஸ்டால் கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்யும்.
உப்பு
நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை 2. 3 மி.கிராம் அளவு மட்டுமே இவை அதிகரிக்கும் போது அவை சிறுநீரகத்தை பாதிக்கும்.
அன்றாட பயன்பாட்டில் உப்பின் அளவு அதிகரித்தால் உடலில் கால்சியம் இழக்கப்படும். ஏனெனில் உப்பு சிறுநீரகங்கள் வழியாக உடலில் இருக்கும் கால்சியத்தை அதிகளவு வெளியேற்றிவிடுகின்றன.
அதிகளவு உப்பு பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஆஸ்டியோபெராசிஸ் என்னும் நோய்க்கு ஆளாவதாகவும், பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஆஸ்டியோபெராசிஸ் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
வெள்ளை சர்க்கரை
எலும்புகளை உருக்குலைக்க செய்வதில் வெள்ளை சர்க்ரைக்கு முதலிடம் உண்டு.
ஏனெனில் சர்க்கரை எலும்புகளுக்கு தான் முதலில் தீமை செய்யும். இவை நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்களையும் வரவழைத்த்துவிடும்.
அன்றாடம் இனிப்பு எடுத்துகொள்ளும் போது உடன் ஊட்டசத்து நிறைந்த உணவை தவிர்க்காமல் எடுக்க வேண்டும்.
செயற்கை குளிர்பானங்கள்
குளிர்பானங்களில் இருக்கும் பாஸ்பாரிக் அமிலம் உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. எலும்பு அடர்த்தியை குறைக்கிறது.
எலும்புகளை மென்மையாக்கி எலும்பு முறிவுக்கு வழி செய்கிறது.எலும்பின் ஆரோக்கியத்துக்கு எதிர்மறையாக செயல்படுகிறது.
ஆல்கஹால்
அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் எடுத்துகொள்ளும் போது அவை உடலில் யூரிக் அமிலத்தை அதிகரித்து விடுகிறது. இவை உடலில் மூட்டுகள் இருக்கும் இடங்களில் தங்கி வலியை உண்டாக்குகிறது.
ஆல்கஹால் அருந்துபவர்கள் எலும்பு அடர்த்தி குறைந்துவிடுவதும், வலுவான எலும்பை மென்மையாக்க செய்வதும் எலும்பு முறிவுக்கு பிறகு எலும்புகள் இணைவதும் தாமதமாகிறது.