வீட்டு ஜன்னலை தட்டி முடங்கியிருக்கும் மக்களை அழைக்கும் ஆழகிய மயில்! 29 லட்சம் பார்வையாளர்களை ரசிக்க வைத்த அரிய காட்சி

3744

மயில் ஒன்று வீட்டின் ஜன்னல் கண்ணாடியை தனது அலகால் கொத்தும் காணொளி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

குறித்த காட்சியை பார்க்கும் போது ஊரடங்கினால் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் மக்களை அழைப்பது போல இருக்கிறது.

இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் இந்த காணொளியை டேக் செய்துள்ளார். இந்த காணொளியை இதுவரை 29.3 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

ஊரடங்கு காலத்தில் மனிதர்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நிலையில் விலங்குகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றது.