-1 C
Innichen
December 4, 2022
Neruppunews
காணொளி

இந்த சிரிப்புக்கு பின்னாடி இப்படி ஒரு துயரமா? டோல்கேட்டில் தின்பண்டம் விற்று வைரலான கல்லூரி மாணவி!!

இணையத்தில் நாம் அதிக நேரம் உலவிடும் போது நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்களை குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக, சில விஷயங்கள் தொடர்பான வீடியோக்கள் நம்மிடையே ஒருவித தாக்கத்தையே உருவாக்கி செல்லும்.

அந்த வகையில் ஒரு வீடியோ தான், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பலரையும் மனம் உருக வைத்திருந்தது. டோல்கேட்டில் கல்லூரி மாணவி ஒருவர், அதிகாலையில் சிரித்த முகத்துடன் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.

மிகவும் புன்னகைத்த படி, ஒரு பாசிடிவ் Vibe கிடைக்கும் அளவுக்கு அவர் விற்பனை செய்து வந்தது தொடர்பான வீடியோ அதிகம் வைரலாகி இருந்தது. ஆனால், அந்த சிரிப்பிற்கு பின்னால் உள்ள கஷ்டம் தான் தற்போது பலரையும் கலங்கடித்து வருகிறது.

விருத்தாச்சலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வந்த தம்பதி சண்முகம் – குப்பு. இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே ரயிலடி அருகேயுள்ள மோட்டார் அறை ஒன்றில் குடும்பமாக தங்கி வருகின்றனர்.

கூலித்தொழில் செய்யும் சண்முகம் மற்றும் குப்பு ஆகியோர், மோட்டார் அறைக்கு பின்புள்ள நிலத்தில் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சண்முகம் அப்பு தம்பதியினருக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதில் முதல் இரண்டு குழந்தைகளும் அப்புவின் தாய் வீட்டில் தங்கி பள்ளி படிப்பை முடித்த நிலையில் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மூத்த மகளின் நர்சிங் கனவை அவரது கணவர் நிறைவேற்றி வருவதாக தெரிகிறது.

இவர்களின் இரண்டாவது மகள் தான் வசந்தி. இவர் கடலூர் மாவட்டம் வடலூர் அருகேயுள்ள மேட்டுக்குப்பத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

ஆனால், தற்போது கல்லூரி கட்டணம் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் போக்குவரத்து கட்டணத்திற்கும் பெரிய அளவில் பணம் இல்லாததால் கடந்த ஒரு மாதமாக கல்லூரிக்கு செல்லாமல் இருந்து வருகிறார் வசந்தி.

இதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் தின்பண்டங்களை விற்று, குடும்பத்தின் கஷ்டத்திற்கு பங்கேற்க தொடங்கியுள்ளார் வசந்தி.

இது பற்றி பேசும் வசந்தி, கல்லூரிக்கு தினந்தோறும் மூன்று பேருந்துகள் ஏறி செல்வதற்கு சுமார் 200 ரூபாய் வரை ஒரு நாளைக்கு ஆவதாக கூறி உள்ளார்.

டோல்கேட்டில் வேலை பார்த்துக் கொண்டு பெற்றோருக்கு உதவி செய்து வருவதாக கூறும் வசந்தி, பெற்றோர் வற்புறுத்தல் பேரில் டோல்கேட்டில் வேலை செய்யவில்லை என்றும்,

அவர்கள் கஷ்டத்தை பார்த்து தானாக வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். வசந்தி அதிகாலையில் சிரித்த முகத்துடன் வேலை செய்யும் வீடியோ பலரது மனதையும் கவர்ந்திருந்தாலும் அவர் பின்னால் உள்ள குடும்ப சூழ்நிலை ஏராளமானோரை மனம் நொறுங்க வைத்துள்ளது.

Related posts

குழந்தைகளுக்கு சளி பிடித்தால்…வியக்கவைக்கும் சீன வைத்தியம்..

Neruppu11

எல்லோரையும் அழுகவைத்த உண்மை சம்பவம் ஒரு நிமிடம் இத அம்மாவுக்காக பாருங்க..!

Neruppu11

மாட்டுடன் ஒரே தட்டில் சாப்பிட்ட விவசாயி.. இந்த தலைமுறையில் இப்படியும் ஒரு இளைஞனா..!

Neruppu11

கண்மணியே நீ உறங்கு! குழந்தை போல் மனைவியை தூங்கவைத்த கணவன்- டிரெண்டிங் ஜோடி

Neruppu11

தன்னுடைய திருமணத்திற்கு இறங்கி குத்தாட்டம் போட்ட மணப்பெண்! மணமகன் என்ன செய்தார் தெரியுமா?

Neruppu11

இந்த உலகத்திலேயே இவங்க தான் கொடுத்துவைத்த மருமகள்… வீடியோ பாருங்க.. அப்புறம் நீங்களே சொல்லுவீங்க..!

Neruppu11

திருடும்போது கையும் களவுமாக சி க் கி ய இளைஞன்: பதிலுக்கு கடை உரிமையாளர் செய்த செயல்..!! வைரலாகும் வீடியோ –

Neruppu11

நாகினிக்கே சவால் விடும் முதியவர்கள்… பாம்பு நடனம் ஆடி சுற்றிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்திய பாம்பாட்டிகள் ..!

Neruppu11

மின்னல் வேகத்தில் பாத்திரம் கழுவும் குரங்கு! ட்ரெண்டாகும் வீடியோ – இப்படியுமா?

Neruppu11