-2.3 C
Innichen
December 3, 2022
Neruppunews
இந்தியா

வெளிநாட்டிலிருக்கும் கணவருடன் கைபேசியில் பேசிய பெண் திடீரென எடுத்த விபரீத முடிவு!!

வெளிநாட்டிலிருக்கும் கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாய்த் தகராறால் மனமுடைந்த பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள கோட்டநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பானுமதி (வயது 25). இவருக்கும், குண்டலகுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வழிவிட்ட அய்யனார் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தம்பதி இருவரும் குண்டலகுத்தூர் கிராமத்தில் கூட்டுக் குடும்பமாகச் சேர்ந்து வாழ்ந்துவந்தனர்.

கட்டடத் தொழிலாளியான வழிவிட்ட அய்யனார், தற்போது வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இந்த நிலையில் பானுமதி தனது கணவர் அய்யனாருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதனால் மனமுடைந்த பானுமதி வீட்டிலுள்ள தனது அறையில் தூக்குப்போட்டு த.ற்.கொ.லை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த அப்பநாயக்கன்பட்டி போலீஸார், பானுமதியின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையில், மருத்துவமனைக்கு வந்த பானுமதியின் பெற்றோர் தன் மகளின் ம.ர.ணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். இதனால் சாத்தூர் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வினோஜ், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பானுமதியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், `மகளின் இ.ற.ப்பில் சந்தேகம் இருந்தால் அது குறித்து புகார் அளியுங்கள்.

மேலும் கூறாய்வு அறிக்கையின் முடிவின்படி தவறு செய்தவர்கள்மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பானுமதியின் உடலை வாங்கிச் சென்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, பானுமதியின் பெற்றோர் அப்பநாயக்கன்பட்டி போலீஸில், மருமகன் அய்யனார், அவரின் தம்பி தமிழ்ச்செல்வன், அவர்களின் பெற்றோர் சூரியவேல், முருகேஸ்வரி ஆகியோர்மீது புகார் அளித்தனர். அதன்பேரில் பானுமதியின் இறப்பு குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related posts

லேப்டாப்புடன் மாப்பிள்ளை! மணப்பெண்ணை காண வில்லையே? தீயாய் பரவும் ஒற்றை புகைப்படம்

Neruppu11

நண்பருக்கு பெண் பார்க்க சென்ற போது மலர்ந்த காதல்! 78 வயதில் திருமணம் செய்து கொண்ட தாத்தா

Neruppu11

நி.ர்.வாணப் போ.ராட்டம் நடத்திய துணைநடிகை : தயாரிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு!!

Neruppu11

படிக்க கஷ்டமாக இருக்கிறது… கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்!!

Neruppu11

திருமணத்திற்கு இந்திய ராணுவத்தை அழைத்த கேரள தம்பதி! இணையத்தில் வைரலாகும் பதில் பதிவு

Neruppu11

மகன்கள், பேரன்கள் முன்னிலையில் 75 வயதான செல்வந்தருக்கு திருமணம்! மனைவியின் சகோதரி தான் மணப்பெண்

Neruppu11

பேத்தி வயது பெண்ணை திருமணம் செய்த 70 வயது தாத்தா! வெளியான ரொமான்ஸ் புகைப்படங்கள்

Neruppu11

இளைஞருக்கு நடக்க இருந்த திருமணம்… மண்டபத்தில் என்ட்ரி கொடுத்த கர்ப்பிணிப் பெண் : நடந்த விபரீதம்!!

Neruppu11

வீட்டிற்கு சேவலை பலி கொடுக்க நினைத்த நபர்! இறுதியில் தனது உயிரைக் கொடுத்த சோகம்: நடந்தது என்ன?

Neruppu11