கொரோனாவுடன் பேருந்தில் பயணித்த 19 வயது இளம்பெண் !! பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்ட கொடுமை !! அடப்பாவமே !!

91

இந்தியா முழுவதும் கொரோனாவால் உயிரிழந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரனோ சந்தேகத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 19 வயது அன்சிகா தனது தாயாருடன் பேருந்தில் பயணம் செய்தார்.

அப்போது அவருக்கு கொரோனா இருக்கலாம் என சந்தேகம் அடைந்த அந்த பேருந்து ஓட்டுநர் நடத்துனர் மற்றும் சக பயணிகள் ஒரு பெரிய போர்வையை எடுத்து அதில் அன்சிகாவை மூடி அப்படியே தூக்கி வெளியே எறிந்துள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

இதுகுறித்து அந்த பேருந்தில் சென்ற அன்சிகாவின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்ததாகவும் ஆனால் அன்சிகாவின் சகோதரர் பத்திரிகைகளில் இது குறித்து பேட்டி கொடுத்த பின்னரே வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.