இரவு தூங்கும் போது ஒரு பல் பூண்டை காதில் வைத்தால் இவ்வளவு நன்மைகளா?

213

உணவு வகைகளில் சேர்க்கப்படும் பூண்டு பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.பூண்டை காதில் வைத்து கொள்வதாலும், சரியான அளவில் சாப்பிடுவதாலும் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.சரி பூண்டை காதில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்ப்போம்:

உடல் வலி
சிறுதுண்டு பூண்டை காதின் உள்ளே வைத்து அடக்கி கொண்டால் உடல்வலி குறையமாம். இதை செய்த பின்னர் உடல் ரிலாக்சாக இருப்பதை உணரலாம்.

காது வலி
காதில் பூண்டை வைத்தால் வீக்கம், தலைவலி, காய்ச்சல், காது வலி போன்ற பிரச்சனைகள் சரியாகும். முக்கியமாக ஒரு பல் பூண்டை இரவு காதில் வைத்து காலையில் எழுந்தால் காதுவலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

தொடர் இருமல்
தொடர் இருமல் காரணமாக அவதிபடுபவர்கள் பூண்டு மற்றும் தேன் கலந்து அதை இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் இருமல் பிரச்சனை குணமாகும்.

இதயத்தின் ஆரோக்கியம்
பூண்டு நமது இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்து கொழுப்பின் அளவை குறைக்கிறது. மேலும் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. இதய கோளாறுகள் ஏற்படாமல் இருக்க தினமும் காலை இரண்டு பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் தரும்.

உயர் ரத்த அழுத்தம்
பூண்டானது நம்முடைய உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்து ரத்த ஓட்டத்தை சிராக்குகிறது. உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் இரண்டு பூண்டு பற்களை சாப்பிட்டு வரலாம்.

படர் தாமரை
படர்தாமைரை, கால் அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு பூண்டு சிறந்த நிவாரணியாகும். பாதிப்பு உள்ள இடத்தில் பூண்டு எண்ணெய்யை தடவினால் விரைவில் பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

கீல்வாதத்தால்
பூண்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை கீல்வாதத்தால் ஏற்படும் வீக்கத்தை தடுக்கிறது. தினமும் காலை வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் கீல்வாத நோய் சரியாகும்.

பல் வலி
பூண்டில் உள்ள வலி நிவாரணி குணங்கள் பல்வலியை சரி செய்யும் வல்லமை கொண்டதாகும். பூண்டு எண்ணெய் அல்லது பூண்டு துண்டை வலி இருக்கும் பகுதியில் வைத்தால் உடனடியாக வலி குறைந்து விடும்.