போட்டோ ஷூட்டிற்காக கடற்கரையில் உள்ள பாறையில் ஏறி நின்ற மணமக்கள்: அடுத்து நடந்த பயங்கரம்!

179

கலிபோர்னியாவிலுள்ள கடற்கரை ஒன்றில் திருமண போட்டோ ஷூட்டிற்காக போஸ் கொடுத்துக்கொண்டிருந்த புதுமணத் தம்பதியரை ராட்சத அலை ஒன்று கடலுக்குள் இழுத்துச் சென்றது.

கலிபோர்னியாவிலுள்ள ட்ரெஷர் கடற்கரை தீவில், திருமணம் முடித்த கையோடு புகைப்படம் எடுப்பதற்காக வந்திருக்கிறது ஒரு ஜோடி.

கடற்கரையில் உள்ள பாறைகளில் அவர்கள் ஏறி நின்று போஸ் கொடுக்கும்போது, திடீரென வந்த ராட்சத அலை ஒன்று அவர்கள் இருவரையும் கடற்கரைக்குள் இழுத்துச் சென்றுவிட்டது.

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினரும் உள்ளூர் lifeguardகளும் கடலுக்குள் குதித்து வெகு நேரம் போராடி அந்த ஜோடியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தை அப்பகுதியில் ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வீடியோவில், மீட்புக் குழுவினர் பசிபிக் பெருங்கடலில் ஆவேசமாக அடிக்கும் அலைகளுடன் போராடி அந்த ஜோடியை கரைக்கு கொண்டு வருவதைக் காணலாம். புதுமணத்தம்பதியருக்கு எந்த சேதமும் இல்லை என தெரியவந்துள்ளது.