நான்ஸ்டிக் தவா நீண்ட காலம் உழைக்க என்ன செய்யலாம்? பெண்களே இதோ ரகசிய டிப்ஸ்…!

90

எந்தவொரு பொருளும் நீண்ட காலம் உழைத்தால் நமக்கு லாபம் தான் கிடைக்கும். அடிக்கடி அதன் ஆயுட்காலம் முடியும் போது அடிக்கடி நாம் செலவு செய்ய நேரிடுகிறது.

நாமும் என்னென்னவோ டெக்னிக் எல்லாம் ஃபாலோ செய்து பார்த்து இருப்போம். ஆனால் எதுவும் பயன் தராது.

பொதுவாக நான்ஸ்டிக் தவாவில் மேற்பரப்பில் ஒட்டிக் கொள்ளாத வண்ணம் மேற்பூச்சு பூசப்பட்டிருக்கும். பாலிடெட்ராஃப்ளூரோஎத்திலீன் (PTFE) என்ற பொருளால் மேற்பரப்பு பூச்சு இடப்படுகிறது.

அனோடைஸ் அலுமினியம், செராமிக்ஸ், சிலிகான், எனாமல் பூசப்பட்ட வார்ப்பிரும்பு போன்ற பிற நான்ஸ்டிக் தவாக்களும் சந்தைப்படுத்தப்படுகின்றன.

இந்த வகையான நான்ஸ்டிக் தவாக்களுக்கு எண்ணெய்கள் தேவையில்லை. குறைந்த அளவு எண்ணெய்யை பயன்படுத்தினால் போதுமானது.

ஒவ்வொரு மூன்று முதல் நான்கு வருடங்களுக்கு நான்ஸ்டிக் தவாவை மாற்றிக் கொண்டே இருங்கள். நான்ஸ்டிக் தவா நீண்ட காலம் நீடிக்க சில உதவிக்குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுவாக நான்ஸ்டிக்கில் சமைப்பதற்கு முன்பு எண்ணெய் இடுவோம். ஆனால் இப்படி எண்ணெய் இடுவது உங்க உடம்பில் தேவையற்ற கலோரி சேர்வதற்கு வழிவகுக்கும்.

எனவே அதில் எண்ணெய்யை ஊற்றுவதற்கு பதிலாக அல்லது வெண்ணெய்யை பரப்புவதற்கு பதிலாக எண்ணெய்யில் நனைத்த காகிதத் துண்டை பயன்படுத்துங்கள். இதை நான்ஸ்டிக்கை சுற்றி துடையுங்கள்.

நான்ஸ்டிக் நீண்ட காலம் உழைக்க உலோக கரண்டிகள், கத்தி போன்ற கூர்மையான பொருட்களைப் பயன்படுத்துவதை தவிருங்கள். உங்க உணவை கடாயில் திருப்ப அசைக்க இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடாதீர்கள்.

ஏனெனில் பொருளில் கூர்மையான விளம்புகள் உங்க மேற்பூச்சிகளை உரிக்கக்கூடும். எனவே தோசையை திருப்ப மரக்கரண்டி, பிளாஸ்டிக் அல்லது சிலிக்கான் கரண்டியை பயன்படுத்துங்கள்.

முதலில் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் டிஷ் சோப்பை பயன்படுத்தி மென்மையான ஸ்பான்ஞ் மூலம் நான்ஸ்டிக்கை சுத்தம் செய்யுங்கள்.

கருகிய உணவுகள், எண்ணெய் போன்றவை ஒட்டிக் கொண்டு இருந்தால், பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரை பயன்படுத்துங்கள். சேதமடைந்த பகுதியில் 15 நிமிடங்கள் சோப்பை தடவி அப்படியே விட்டு விடுங்கள். அதை சுத்தம் செய்த பின் ஒரு காகித துண்டை எண்ணெய்யில் ஊற வைத்து நான்ஸ்டிக்கின் மேற்பரப்பை துடைக்க வேண்டும்.

நான்ஸ்டிக் தவா போன்றவைகள் குறைந்த மற்றும் மிதமான வெப்ப சமையலுக்கு இணக்கமானவை. அதிக வெப்பத்தால் மேற்பூச்சு சேதமடைய வாய்ப்பு உள்ளது.

எனவே சரியான வெப்பநிலையில் வைத்து பயன்படுத்துங்கள். வெப்ப நிலையை கண்டறிய அதன் மேல் வெண்ணெய்யை ஊற்றி அதில் குமிழ்கள் ஏற்பட்டால் வெப்பம் சரியாக இருக்கும். இதுவே வெண்ணெய் எரிந்து பழுப்பு நிறமாக மாறினால் வெப்பத்தை குறைக்க வேண்டும்.

அதே மாதிரி நான்ஸ்டிக் தவாவில் உணவை அப்படியே வைப்பது பாத்திரத்திற்கு சேதத்தை விளைவிக்கும்.

ரொம்ப நேரம் அப்படியே வைப்பது உணவில் மேற்பூச்சு வாசனை அடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே உணவை சேமிக்க எப்போதும் சரியான பாத்திரங்களை பயன்படுத்துங்கள்.

முக்கிய குறிப்பு

தக்காளி மற்றும் எலுமிச்சை போன்ற அமில உணவுகளை சமைப்பது உங்க நான்ஸ்டிக் தவாவின் மேற்பூச்சில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே இந்த உணவுகளை சமைக்க வேறு பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள்.

எல்லா நான்ஸ்டிக் தவாக்களையும் அடுப்பில் வைத்து பயன்படுத்த முடியாது. சில நான்ஸ்டிக் தவாக்கள் ரொட்டியை சுடுவதற்கு மட்டுமே பயன்படுகின்றன.

மேற்கண்ட வழிமுறைகளை நீங்களும் பின்பற்றி வந்தால் உங்க நான்ஸ்டிக் பாத்திரங்களும் நீண்ட காலம் வரும்.