இந்த தேதிகளில் பிறந்தவர்களின் சுபாவம் இதுதான்… கல்யாணம் செய்யும் முன் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு

766

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். திருமணம் என்பது இரு உள்ளங்கள் இணையும் விழா. என்னதான் பெற்றவர்கள் ஜாதகம், குடும்பப் பிண்ணனி என ஆயிரம் பார்த்தாலும் பிறந்த தேதியை வைத்தே நமது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கலாமா என கணித்து விடலாம்.

அதைப் பற்றி தெரிந்து கொள்ள மேலே படியுங்கள்…

1, 10, 19, 28…

1ம் தேதி பிறந்தவர்கள் மட்டும் அல்ல 1, 10, 19, 28 என பிறந்தவர்கள் இயல்பிலேயே தலைமைப்பண்பு மிக்கவர்கள். மற்றவர்களை வழிநடத்த வேண்டும் என விரும்புவார்கள். மேலாதிக்கம் உள்ள இவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையை ஆள வேண்டும் என்றும் நினைப்பார்கள். 1ம் தேதி பிறந்த இந்த உள்ளங்கள் காதலை எதற்காகவும், யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள். இந்த ஆண்டு இவர்களின் நீண்ட நாள் காதல் ஈடேறும். சரி ஏற்கனவே மணம் முடித்தவர்களுக்கு என்கிறீர்களா? திருமணத்துக்கு பின்னான காதல் ஜிவ்வென்று ஏறும் தங்கள் வாழ்க்கைத் துணையோடு!

எண் 2: அதாவது 2, 11, 20, 29

இவர்கள் அதிக உணர்ச்சி வசப்படுபவர்களாக இருந்தாலும் அடிப்படையில் அமைதியானவர்கள். உணர்வுரீதியாக இணைந்திருப்பதை விட உடல் ரீதியாக இணைதலை அதிகம் விரும்புபவர்கள். மாறிக்கொண்டே இருக்கும் இவர்களின் மனநிலையை சமாளிப்பது கடினம். எனவே அவர்கள் நிலையான மனமுடையவருடன் காதலில் இருத்தல் சுகம். அதேநேரம் இவர்கள் காதல் மற்றும் திருமண வாழ்வில் தன்னிறைவு பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

எண் 3: அதாவது 3,12, 21, 30

உறவுகளில் ரொம்பவே யதார்த்தத்தை கடைபிடிக்கும் இவர்கள் நான் எப்பவும் இதைக் கேட்டு வேலை செய்ய மாட்டேன். இதைக் கேட்டு தான் வேலை செய்வேன் என்னும் விஜய் டயலாக்கிற்கு உல்டாவாக, இவர்கள் இதயத்தைக் கேட்டு வேலை செய்வதில்லை. மூளையை கேட்டே வேலை செய்வார்கள். ஆனால் இவர்களால் அந்நியன் ரெமோ போன்று ரெமாண்டிக் காட்டத் தெரியாது. எனவே காதலிக்கத் தெரிந்த ஒருவருடன் உறவில் இவர்கள் இருப்பது நல்லது.

எண் 4 …4,13, 22,31

வழக்கத்துக்கு மாறாக நடப்பது இவர்கள் சுபாவம். இந்த தேதிகளில் பிறந்தவர்களிடம் நிச்சயம் ஒரு தனித்துவ குணம் இருக்கும். காதலில் இவர்களுக்கு பெரிய ஈர்ப்பு இல்லாவிட்டாலும், தன் வாழ்க்கைத் துணைக்கு ஒருநாளும் துரோகம் செய்ய மாட்டார்கள். வாழ்க்கைத்துணை சொல்வது தான் அவர்களின் வேதவாக்கு. எப்போதும் இவர்கள் நிதானத்துடன் இருப்பது உறவுகளை தக்கவைக்கவே!

எண் 5 அதாவது 5,14,23

இவர்களுக்கு பல காதல்கள் திருமணத்துக்கு முன்பே இருக்க சாத்தியம் உண்டு. தனக்கு சரியான இணையைத்தேடி அவர்கள் அடிக்கடி ஆள்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இவர்களின் பெரும் பிரச்னை உறவுகளின் மீது படக்கென்று சலிப்பு வந்துவிடும். புதிது, புதிதாக காதலிக்க விரும்புவார்கள். பால் உறவிலும் இவர்களுக்கு நாட்டம் கூடுதல். 5ம் எண்ணில் பிறந்தவர்கள சமாளிக்கக் கூடியவர்கள் 7ம் எண்ணில் பிறந்தவர்களால் மட்டுமே முடியும்.

எண் 6 அதாவது 6,15,24

எண் 6ல் பிறந்தவர்கள் காதலையும், அமைதியும் விரும்புபவர்கள். அதீத காதலும், வசீகரமும் இவர்களின் சிறப்பு. இவர்களின் பலவீனமே எளிதில் உணர்ச்சி வயப்படுவது தான். இவர்கள் மனம் கூடுவிட்டு கூடு பாயும் தன்மை கொண்டது. இதனால் இவர்கள் திருமண உறவுக்கு வெளியே வேறு தொடர்பு வைத்துக்கொள்ள வாய்ப்பு கூடுதல். இவர்கள் பொதுவாகவே உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்தவே விரும்புவார்கள்.

எண் 7 அதாவது 7,16, 25

இவர்கள் குறைவாகவே பேசுவார்கள். வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு துணையுடன் உணர்வுரீதியாக இணைந்து இருப்பது அவசியம் என நினைப்பார்கள். ஆனால் என்ன சின்ன விசயங்களையும் அதிகமாக ஆராய்ந்து தலைபாரத்தை ஏற்றிக் கொள்வார்கள். இதனால் தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை , வாக்குவாதம் நடக்கும். இதை அவர்கள் கட்டுப்படுத்துவது மிகுந்த நல்லது.

எண் 8 …அதாவது 8,17,26

வலிமைக்கு பெயர் போனவர்கள் இந்த நாளில் பிறந்தவர்கள். ஆனால் இவர்கள் மற்றவர்களால் தவறாகவே புரிந்து கொள்ளப்படுவார்கள். ஒரு மிக்கியமான விசயம் இந்த நாளில் பிறந்தவர்கள் திருமண வாழ்வில் அதிக துன்பத்துக்கு ஆளாவார்கள். மனதுக்கு தோன்றுவதை இவர்கள் அப்படியே செயல்படுத்துவார்கள். திருமணம் முடிந்த உடன் இவர்கள் நெருங்கிப் பழக ஆரம்பிக்க மாட்டார்கள். இவர்கள் துணையைத் தேர்ந்தெடுக்கவும், அவர்களுடன் முழுமையாக இணையவும் அதிக காலம் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் ஒருமுறை இணைந்துவிட்டால் அதன் பின்னர் பிரியவே மாட்டார்கள். இவர்கள் 4ம் தேதி, 8ம் தேதி பிறந்தவர்களை தவிர்த்தல் இருவருக்கும் நல்லது.

எண் 9 ..அதாவது 9, 18, 27

இவர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் பாதிப்பு அதிகம் இருக்கும். அதனால் தான் இவர்களுக்கு கோபமும், ஆற்றலும் அதிக அளவில் இருக்கும். அதிக உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்வது இவர்கள் வழக்கம் அல்ல. உடலுறவில் இவர்களுக்கு நாட்டம் அதிகம் இருக்கும். திருமணத்துக்கு பின்னரும் வெளியில் இவர்கள் உறச்வுகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு உண்டு. அதே நேரம் வாழ்க்கைத்துணை நெருக்கம் காட்டினால், நச்சென்று மனதோடு ஒட்டிக் கொள்வார்கள்.