சளி தொல்லை அதிகமாக இருக்கா? இந்த பாரம்பரிய தேநீர் குடிச்சு பாருங்க

40

பெரும்பாலோனோருக்கு பருவ நிலை மாற்றங்கள் காரணமாக அடிக்கடி சளி தொல்லை ஏற்படுவது வழக்கம்.

அதுமட்டுமின்றி சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடுகின்றது.

இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் துளசி, மஞ்சள், வேப்பிலை போன்ற மூலிகைகளைக் கொண்டு தேநீர் தயாரித்து அருந்தி வந்தனர்.

இந்த தேநீரில் ஆன்டி வைரல் பண்புகள் இருப்பதால் தொற்று நோய் களிலிருந்து நம்மை காக்கிறது என்று நம்பப்படுகின்றது.

ஆனால் அடிக்கடி கண்ட கண்ட மருந்துகளை பலர் இந்த காலத்தில் வாங்கி குடிப்பதுண்டு. ஆனால் இது பின்னடைவில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில் சளி தொல்லையில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் கையாண்டு வந்த ஓர் மூலிகை தேநீர் ஒன்றை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
 • தண்ணீர் – 2 கப்
 • அரைத்த இஞ்சி விழுது – 1/2 தேக்கரண்டி
 • நுனிக்கிய கிராம்பு மற்றும் கருப்பு மிளகு – 1/2 தேக்கரண்டி
 • தேயிலை – 1/2 தேக்கரண்டி
 • துளசி இலைகள் – 5
 • அரைத்த மஞ்சள் வேர் – ஒரு சிட்டிகை
 • எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
 • தேன் – 1 தேக்கரண்டி
செய்முறை

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை கொதிக்க விடுங்கள். அதனுடன் அரைத்த இஞ்சி, அரைத்த மஞ்சள், நுனிக்கிய கிராம்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து கொள்ளுங்கள்.

பிறகு 5 துளசி இலைகள் மற்றும் தேயிலை இலைகளையும் சேர்த்து கொதிக்க விடுங்கள்.

3 நிமிடங்கள் கொதிக்க வைத்து பிறகு 2-3 மணி நேரம் கழித்து வடிகட்டி அதில் எலும்பிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன் சேர்த்து பாரம்பரிய டீயை குடியுங்கள். வேண்டும் என்றால் பிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது எடுத்துக் கூட பயன்படுத்தலாம்.

நன்மைகள்
 • இது தொற்று நோயை எதிர்க்கும் வைரஸை எதிர்த்து போரிடுகின்றன.
 • அழற்சியை குறைத்து பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து போரிடுகிறது.
 • ஆஸ்துமா மற்றும் பிற ஒவ்வாமை விஷயங்களை களைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.