இந்த பழத்தின் தோலை கொண்டு வலி இல்லா வைத்தியம் பார்க்கலாம்! எப்படி தெரியுமா?

68

வாழைப்பழம் பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. குறிப்பாக பொட்டாசியம் சத்து வாழைப்பழங்களில் அதிகம் நிறைந்துள்ளது.

தினமும் காலையில் வாழைப்பழம் சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு, உற்சாகம் நிறைந்திருக்கும்.

ஆனால் வாழைப்பழத்தை விட வாழைப்பழத்தின் தோலில் அதிக நன்மைகள் உள்ளன.

குறிப்பாக வாழைப்பழ தோல் நமது சரும பிரச்சனைகள், காயங்கள், பூச்சிக்கடிகள் மற்றும் மன நோய் போன்ற இன்னும் பல பிரச்சனைகளை போக்க உதவுகிறது.

அந்தவகையில் எந்த பிரச்சனைக்கு எப்படி வாழைப்பழ தோலை பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

தினமும் காலையில் பல் தேய்க்கும் முன்பு வாயை சுத்தமான நீரில் கொப்புளித்து, பிறகு வாழைப்பழத்தோலை கொண்டு பற்களின் மீது தேய்த்து பிறகு பிரஷ் கொண்டு துலக்கினால் பற்கள் பளிச்சிடும். இவை பற்களை பளிச் ஆக்குவதோடு ஈறு அழற்சியிலிருந்தும் காக்கிறது. பொதுவாகவே வாரம் ஒருமுறை வாழைப்பழத்தோலை கொண்டு பற்களை தேய்த்துவரலாம்.

சிறு பூச்சிகள் கடித்தால் சருமத்தில் எரிச்சலும் தடிப்பும் உண்டாவதுண்டு. குழந்தைகளின் சருமம் மென்மையாக இருக்கும் என்பதால் சாதாரணமாக கொசு கடித்தாலும் சருமத்தில் சிவப்பும், எரிச்சலும் ஏற்படும். வாழைப்பழத்தோலை கொண்டு குழந்தையின் சருமத்தை மென்மையாக தேய்த்து விடும் போது சருமத்தில் இருக்கும் சிவப்பு மறையும். எரிச்சல் இருந்தாலும் குறையதொடங்கும்.

தினமும் இரவு மூன்று வாழைப்பழத்தோலை கால் பாதத்தின் பக்கம் வைத்து வெள்ளை துணியில் கட்டிவிட வேண்டும். இதே போன்று தொடர்ந்து கட்டி வந்தால் கால் ஆணி குணமாக அதிக வாய்ப்புண்டு.

கால் வறட்சியை போக்க முடியவில்லை என்பவர்களும் வாழைப்பழத்தோலை பாதத்தின் மீது வைத்து அதன் மேல் மெல்லிய துணி கொண்டு கட்டிவிட்டால் பாதம் மென்மையாகும்.

வாழைப்பழத்தோலை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து குளிரவைக்கவும். அரை மணி நேரம் கழித்து வாழைப்பழத்தோலை கொண்டு முகத்தின் நெற்றி முதல் கழுத்து வரை ஒற்றி எடுக்கவும். குளிர்ந்த நிலை குறையும் வரை தொடர்ந்து செய்யவும். ஒவ்வொரு தோலையும் குளிர்ந்த நிலை வரை நெற்றி முதல் கழுத்து வரை ஒற்றி எடுக்கவும். நிச்சயம் ஒற்றைத்தலைவலியின் தீவிரம் குறைந்திருக்கும்.

தடுக்கி விழுந்து அடிபடும் இடத்தில் ரத்தகட்டு ஏற்பட்டால் அதன் மீது வாழைப்பழத்தோலை வைத்து சிறிது நேரம் இலேசாக தேய்த்தபடி இருந்தால் அடிபட்ட இடத்தின் ரத்தகட்டு நீங்கும். வலியும் குறையும்.

காலில் முள், கண்ணாடி உடைந்த இடங்களுக்கு அருகில் செல்லும் போது ஒட்டிக் கொள்ளுதல் போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாவதுண்டு. இதற்கு வாழைப்பழத்தோலை உடலில் அந்த பொருள் இருக்கும் இடத்தில் ஒட்டி விட வேண்டும். இரண்டு மணி நேரத்துக்கு அந்த இடத்தை அசையாமல் வைக்க வேண்டும். பிறகு அந்த வாழைப்பழத்தோலை எடுத்து பார்த்தால் முள் தோலில் ஒட்டியிருக்கும் அல்லது சருமத்திலிருந்து வெளியேறும் நிலையில் இருக்கும்.