உங்க உடம்புல இருக்கற கழிவை வெளியேற்ற வேண்டுமா? இந்த மூலிகை சூப் குடிங்க

66

மூலிகைகள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பங்கு வகிக்கின்றது.

அந்தவகையில் மூலிகைகள் கலந்து செய்யப்படும் பொருட்களில் உடலில் உள்ள அத்தனை நோய்களை போக்கும் வல்லமை படைத்தது.

அதில் மூலிகை கலந்து தயாரிக்கப்படும் சூப் உடலில் உள்ள கழிவுகள் எல்லாம் வெளியேற்றி விடுகின்றது.

தற்போது மூலிகை கலந்து செய்யப்படும் அற்புத சூப்பினை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையானவை

ஆலிவ் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

ஷீடாக் காளான் -10 முதல் 15 (நறுக்கியது)

பூண்டு – 5 பல் (நசுக்கியது)

இஞ்சி – 1 அங்குல துண்டு (நசுக்கியது)

உலர்ந்த ஏஞ்சலிக்கா வேர் – 1 தேக்கரண்டி (பொடித்தது)

அஸ்ட்ராகாலஸ் வேர் (உலர்ந்தது) -2 தேக்கரண்டி

எலுமிச்சைப் புல் (உலர்ந்தது) – 1 மேசைக்கரண்டி

நீர் – (2.5 லிட்டர்)

பார்ஸ்லே இலை – 2 தேக்கரண்டி

கடல் உப்பு மற்றும் மிளகு – சுவைக்காக தேவையான அளவு

எலுமிச்சை சாறு -2 தேக்கரண்டி

செய்முறை

பெரிய பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெயை எடுத்து மிதமாக சூடுபடுத்தவும்.

பின்னர் காளான், பூண்டு, இஞ்சி, ஏஞ்சிலிக்கா, அஸ்ட்ராகாலஸ் மற்றும் எலுமிச்சைப் புல் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் சூடாக்கவும். அப்போது நன்கு கலக்கிக்கொண்டே இருக்கவும்.

நீர் சேர்த்து இந்தக் கலவை கொதிக்குமளவுக்கு சூடாக்கவும். பின் நெருப்பையை குறைக்கவும்.

கொதிநிலையை எட்டாமல் 15 முதல் 20 நிமிடங்கள் வரை மிதமாக சூடாக்கவும். வேர்கள் மிருதுவாகும்வரைக்கும் சூடாக்கவும்.

இறுதியில் பார்ஸ்லே இலை, உப்பு, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.