புறா வளர்ப்பில் மலர்ந்த காதல்! சே ர்த்து வைத்த லா க்டவுன்…? பூ ட்டிய கோவில் முன் திருமணம்

993

பூட்டிய கோவில் முன்பாக திருமணம் செய்து கொண்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர் திருச்சி காதல் ஜோடிகளின் செயல் இணையவாசிகளை வியக்க வைத்துள்ளது.

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த ஆசாத் பிரின்ஸ், புறா வளர்ப்பில் ஈடுபாடு உள்ளவர்.

இதனால் பொன்மலை பகுதியில் ஞாயிறுதோறும் நடைபெறும் சந்தைக்கு செல்வது வழக்கம். புறா சந்தைக்குப் போகும் வழியில் காட்டூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இருவர் காதலுக்கும் வீடுகள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் கொரோனாவை காரணம் காட்டி லாக்டவுனும் அமலாக்கப்பட்டது.

இதனால் காதல் ஜோடிகள் நேரில் சந்திக்க முடியாமல் துயரப்பட்டுள்ளனர். இந்த துயரத்துக்கு முடிவு கட்டுவோம் என இருவரும் உறுதி எடுத்துக் கொண்டு பூட்டி இருந்த வழிவிடு வேல்முருகன் கோவில் முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பின்னர் நேராக கோட்டை மகளிர் காவல்நிலையம் சென்று போலீசிடம் அடைக்கலம் கோரியுள்ளனர்.

இதனால் இருதரப்பிலும் பெற்றோரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் திருமணத்துக்கு இருதரப்பும் ஒப்புக் கொண்டது.

பின்னர் பல நாள் காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சியில் இருவரும் வீடு திரும்பியுள்ளனர். இந்த ஜோடிக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.