இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? இனி தினமும் ஒன்று சாப்பிடுங்க… அப்புறம் இதெல்லாம் நடக்கும்?

1194

நட்சத்திர பழம் என்பது அதிக ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய ருசியான பழ மாகும்.

இதன் வடிவம் 5 முகப்புகளைக் கொண்ட நட்சத்திர வடிவில் காணப்படும்.

ஊட்டச்சத்து அளவுகள்

100 கிராம் நட்சத்திர பழத்தில்
34.4 மில்லி கிராம் விட்டமின் சி
1 கிராம் புரோட்டீன்
133 மில்லி கிராம் பொட்டாசியம்
10 மில்லி கிராம் மக்னீசியம்

2மில்லி கிராம் சோடியம்
61IU அளவு விட்டமின் ஏ
3 மில்லி கிராம் கால்சியம்
0.1 மில்லிகிராம் இரும்புச் சத்து

நார்ச்சத்து
7 கிராம் கார்போஹைட்ரேட்

31 கலோரிகள்(குறைந்த கலோரியை கொண்டது)

நன்மைகள்

நட்சத்திர பழம் புற்று நோயை தடுக்கிறது என்று நிறைய ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதிலுள்ள பாலிபினோலிக் செல்களில் ஏற்படும் மியூட்டோஜெனிக் விளைவை தடுத்து கல்லீரல் புற்று நோய் போன்றவை வராமல் தடுக்கிறது.

இதில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால் குடலை சுத்தப்படுத்தி குடல் புற்று நோய் வருவதை தடுக்கிறது.

இதில் அதிகளவில் விட்டமின் சி இருப்பதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் காய்ச்சல், இருமல், அல்சர், தொண்டை புண் போன்றவற்றை குணப்படுத்துகிறது.

எனவே காலையில் உங்கள் ஸ்மூத்தியுடன் இந்த நட்சத்திர பழத்தையும் சேர்த்து குடித்து வந்தால் உங்களின் வெள்ளை அணுக்கள் அதிகமாகி நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நட்சத்திர பழத்தில் அதிகளவில் பொட்டாசியம், சோடியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கிறது.

இதனால் இதய நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது. இதயத் துடிப்பு, ஆரோக்கியமான இரத்த ஓட்டம் இருப்பதால் இதயமும் ஆரோக்கியமாக செயல்படும்.

இது வெறும் 31 கலோரிகளை க் கொண்டு இருப்பதால் உங்கள் எடை குறைக்கவும் உதவுகிறது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு நிரம்பின எண்ணத்தை தருகிறது.

உங்கள் மெட்டா பாலிசத்தை அதிகரித்து தேவையற்ற கலோரிகளை எரித்து எடை குறைப்பை எளிதாக்குகிறது.