Home » ரூ.5000 முதல் மாத சம்பளம்., தற்போது 11 கோடிக்கு பங்களா வாங்கிய இந்திய யூடியூப்பர்: யார் அவர்?

ரூ.5000 முதல் மாத சம்பளம்., தற்போது 11 கோடிக்கு பங்களா வாங்கிய இந்திய யூடியூப்பர்: யார் அவர்?

by ftcnc
0 comment 590 views

ரூ.5000-த்தில் முதல் சம்பளத்தை ஆரம்பித்த யூடியூப்பர் இன்று தலைநகர் டெல்லியின் முக்கிய இடத்தில் 11 கோடி மதிப்பிலான பங்களாவை வாங்கும் உயரத்தை அடைந்துள்ளார்.

11 கோடிக்கு பங்களா

இந்தியாவில் சமூக ஊடகங்கள் வழியாக பணம் சம்பாதிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதிலும் யூடியூப் வழியாக சிலர் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க தொடங்கி விட்டனர், அந்த வகையில் வளர்ந்து வரும் நவீனத்துவம் மற்றும் மாறி வரும் சூழல்களை சரியாக பயன்படுத்திக் கொண்ட புவன் பாம்(Bhuvan Bam) இன்று இந்தியாவின் முதன்மையான யூடியூப் செல்வாக்கு உடையவராக மாறியுள்ளார்.

அத்துடன் இந்தியாவின் பணக்கார யூடியூப்பர் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளார். இவர் தற்போது டெல்லி தேசிய பட்டுப் பாதையில் அமைந்துள்ள கிரேட்டர் கைலாஷ் பகுதியில்(Greater Kailash area) கிட்டத்தட்ட ரூ.11 கோடிக்கு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்த தகவல் ரியல் எஸ்டேட் பகுப்பாய்வு நிறுவனமான CRE Matrix-ந் ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ரூ.11 கோடி பங்களாவுக்கு புவன் பாம் கிட்டத்தட்ட ரூ.77 லட்சம் முத்திரை தொகையாக மட்டும் கட்டணம் செலுத்தியுள்ளார்.

ஆவணங்களின் படி பங்களாவின் மொத்த பரப்பளவு 2233 சதுர அடி, புவன் பாம் இந்த சொத்தை கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் திகதி பதிவு செய்துள்ளார்.

ரூ.5000 சம்பளத்தில் தொடங்கிய வாழ்க்கை

புவன் பாம் தன்னை கிதார்(guitarist) கலைஞராக ஷோக்களில் முன்னிலைப்படுத்திக் கொண்டு தனது வாழ்க்கையை தொடங்கினார். குஜராத் மாநிலத்தின் வதோதராவை பகுதியை சேர்ந்த புவன் பாம் தன்னுடைய இசை பயணத்தின் தொடக்க காலத்தில், உணவகங்கள் மற்றும் காபி கடைகளில் மாதம் வெறும் ரூ.5000க்கு இசைக் கலைஞராக பணியாற்றியுள்ளார்.

ஆனால் யூடியூப்பில் நகைச்சுவையான தன்னுடைய “பிபி கி வைன்ஸ்”(BB Ki Vines) என்ற குறுகிய வீடியோ தொடர் மூலம் புவன் பாம் பிரபலமடைந்தார்.

தற்போது இந்தியாவின் பணக்கார யூடியூப் செல்வாக்கு கொண்டவராக மாறியுள்ள புவன் பாம், பல திரைப்படங்கள், இணைய தொடர்கள் மூலமாகவும் சம்பாதிக்கிறார்.

புவன் பாமின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலராகும், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 122 கோடியாகும்.

You may also like

Leave a Comment