சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் உ.ட.ல்.நிலை.க்கு.றை.வால் கா.ல.மா.னார்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வெள்ளை சட்டை, காக்கி உடுப்பில் வழக்குக் கட்டுகளோடு வலம் வரும் டிராபிஃக் ராமசாமியை பார்க்காதவர்கள் அரிது என்றே சொல்லலாம்.

சட்டையின் இரு பாக்கெட்டுகளிலும் வழக்குக் கட்டுகளை வைத்திருப்பது அவரது பழக்கம். ஹெல்மெட் விவகாரம், கட்அவுட் கலாசாரம், வரம்புமீறிக் கட்டப்படும் கட்டடங்கள், கட்டுப்பாடில்லாமல் சுற்றிய மீன்பாடி வண்டிகள் என டிராபிஃப் ராமசாமி கையாண்ட பொதுநல வழக்குகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது அவ்வளவு எளிதல்ல.

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரையும் வி.ம.ர்.சிப்பதில் அவர் தயக்கம் காட்டியதில்லை.

அதிலும் ஜெயலிலிதா முதல்வராக இருந்த போது அவரது புகைப்படம் இடம்பெற்ற பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டதற்கு எதிராக அவர் துணிச்சலுடன் போராடினார்.

இந்த நிலையில் 88 வயதான டிராபிஃக் ராமசாமி சில காலமாக உ.ட.ல்.ந.ல.க்.கு.றை.வால் பா.தி.க்.கப்பட்டார்.

இதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி ம.ரு.த்.துவமனையில் சிகி.ச்.சை. பெற்று வந்தார்.

இந்த நிலையில் சி.கி.ச்.சை ப.ல.னி.ன்றி டிராபிஃக் ராமசாமி உ.யி.ரி.ழ.ந்.துள்ளார்.