பிலவ தமிழ் புத்தாண்டு 2021ல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப்போகின்றது என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம் 

மேஷ ராசிக்கு இந்தாண்டு ஓரளவுக்குச் சிறப்பான ஆண்டாக தான் இருக்கும். நிதி நிலையைப் பொறுத்த வரையில் பெரிய பாதிப்பு ஏற்படாது. முன்னேற்றமானதாக இருக்கும்.

8ல் கேது அமர்ந்திருப்பதால் நீங்கள் ஏதேனும் ஒரு வகையில் பிர்ச்னை அனுபவித்துக் கொண்டே தான் இருக்க நேரிடும். இருப்பினும் நீங்கள் எடுத்துக் கொண்ட செயலில் சற்று கூடுதல் முயற்சி எடுத்தால் வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும். காதல் கைகூடும். பொருளாதார நிலை சிறக்கும்.

குடும்பத்தில் நிம்மதியும், மன நிறைவும் ஏற்படும். வண்டி வாகனத்தில் செல்லும் போது சற்று கவனமுடன் செல்வது நல்லது. திருமண யோகமும், குழந்தை பாக்கியமும் ஏற்படும். விநாயகர் வழிபாடு சிறப்பான பலனைத் தரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு இந்தாண்டு தொழில், வியாபாரத்தில் நாம் நினைத்தளவு கடன் கிடைக்காத காரணத்தால் வேலையில் தொய்வு, வியாபாரத்தைப் பெருக்க தடுமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இருப்பினும் பெரிதளவு லாபத்தில் குறை ஏற்படாது. நிதி நிலையில் சற்று கவனமாக இருக்க வேண்டியதாக இருக்கும். பண பரிவர்த்தனையில் கவனம் வேண்டும். நீங்கள் நினைத்ததை விட அதிக செலவு ஆக வாய்ப்புள்ளது. பெண்களுக்கு உற்சாகத்தை ஏற்படக்கூடியதாக இருக்கும்.

வீட்டில் திட்டமிருந்த சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. திடீர் யோகமாக ஆடை, ஆபரணம், சொத்துக்கள் கிடைக்கக்கூட வாய்ப்புள்ளது. உங்களின் மதிப்பு மரியாதை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் கல்வி நிலை முன்னேற்றம் தருவதாக இருக்கும்.

​மிதுனம் 

இந்தாண்டு முழுவதும் பல்வேறு வகையில் உங்களுக்கு நற்பலனை அனுபவிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. குடும்பத்திலும், சுற்றத்தாரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிப்பதற்கான பல சூழல் உண்டாகும்.

பெண்களுக்கு வயிறு சார்ந்த சில பிரச்னைகள் ஏற்படலாம் கவனம் தேவை. மாணவர்களின் கல்வியில் சிறு தடைகள் ஏற்படலாம். தடுமாற்றம் ஏற்படலாம். சுய தொழில் செய்பவர்களுக்கு நினைத்த நேரத்தில் கடன் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால் தொழில் ரீதியான முன்னெடுப்புகளைச் செய்வதில் தடுமாற்றம் ஏற்படும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் பிரச்சினையும், தடையும் ஏற்படலாம்.

​கடகம் 

இதுவரை உங்கள் தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். உங்கள் செயல்பாடுகளில் இருந்த தடையும், தயக்கமும் நீங்கி முன்னோக்கு உங்கள் செயல்பாடு இருக்கும்.

இதன் மூலம் உங்கள் குடும்பமாக இருந்தாலும், பணிச் சூழலிலும் இனிமையான சூழல் நிலவும். ஆண்டின் நடுவில் உங்கள் ராசிக்கு தொழில், வேலை மற்றும் குடும்பத்தில் நல்ல திருப்புமுனை தரக்கூடியதான வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் தரக்கூடியதான நல்ல வாய்ப்புகள், விற்பனை நடக்கும்.

 ​சிம்மம்

இந்தாண்டு உங்களுக்கு குரு மூலமாக யோகம் ஏற்படக்கூடிய நிலை இருந்தாலும், அதிசார குரு பின்னர், கும்பத்தில் செல்லக்கூடிய குரு ஆகிய நிலையின் போது உங்களுக்கு நற்பலனைத் தரக்கூடியதாக இருக்கும். உங்கள் ராசிக்கு ரண, ருண, ரோக ஸ்தானம் எனும் 6ல் சனி இருந்தாலும், இதனால் உங்களுக்கு தேவையற்ற மன வருத்தம், மனக்குழப்பம், சஞ்சலங்கள், பீதிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே சமயம் உடல் நலனில் சற்று பிரச்னைகள் தரக்கூடியதாக இருக்கும்.

முடிந்தால் சனி பகவானுக்குரிய ஆலயத்திற்குச் சென்று வருவது நல்லது. முடிந்த போதெல்லாம் சிவாலயங்களுக்கு சென்று வருவதும், நவகிரகங்களை வணங்கி, சனி பகவானை சிறப்பாக வழிபட்டு வருவது அவசியம்.

குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஒட்டுமொத்தமான மருத்துவ செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை தேவை.

​கன்னி

5ல் சனி ஆட்சி பெற்று அமர்ந்துள்ள நிலையில், குரு பகவான் 6ல் மறைவு ஸ்தானத்தில் இருக்கிறார். இதனால் உங்களுக்கு பல வகையில் கவனமாக இருக்க வேண்டிய நிலை இருக்கும். எதிலும் கவனமாக செயல்படவும். பயணங்களின் போது சில சிறு விபத்துகள் அல்லது பிரச்னை ஏற்படக்கூட வாய்ப்புள்ளது என்பதால் எச்சரிக்கையாக வாகனம் ஓட்டவும்.

நிதி நிலையில் சில தடுமாற்றங்கள் சந்திக்க வேண்டிய நிலை இருக்கும். இதனால் உங்களின் தொழில், வியாபாரத்தின் போது நீங்கள் எடுக்க நினைக்கும் முன்னேற்ற செயலில் தடங்கல் ஏற்படும்.

எந்த ஒரு பணியிலும் அதற்கான ஆவணங்களை முறையாக கையாளவும். பெண்கள் தங்களின் ஆரோக்கயத்திலும், பயணங்கள், வண்டி ஓட்டுவதில் மிக எச்சரிக்கையாக இருப்பது நல்லது. முடிந்த வரை நீண்ட தூர பயணங்களைத் தடுப்பது அவசியம். மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படிக்கவும்.

 ​துலாம்

ஆண்டின் தொடக்கத்திலிருந்தே உங்களுக்கு நற்பலன்களைக் குவியக்கூடியதாக இருக்கும். ஏனெனில் குருவின் 9ம் பார்வை உங்கள் ராசி மீது விழுவது மிகவும் சிறப்பு. அதோடு சந்திரன் கோச்சார ரீதியாக நல்ல இடத்தில் அமைந்திருப்பதால் சிறந்த பலனைத் தரும்.

உங்களுக்கு பெற்றோர் மூலமாக வர வேண்டிய சொத்துக்கள் வர வாய்ப்புள்ளது. அதோடு பண விஷயத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். நிதி நிலை மேம்படும். அரசு வகையில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்துடன் வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர வாய்ப்புள்ளது.

 விருச்சிகம்

உங்களுக்கு மிக முக்கிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் தொழில், உத்தியோகம் உள்ளிட்ட செயல்களில் புதுமைகளை புகுத்துவீர்கள்.

அதன் மூலம் சிறப்பான வெற்றியும், நற்பெயரையும் பெற்றிடுவீர்கள். குடும்பத்தில் சகோதரர்களுடனான மன கசப்பு தோன்றி மறையும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.

சொத்து பிரிப்பது குறித்த விஷயங்கள் நடக்கலாம். சிலருக்கு நீண்ட நாள் கனவாக இருக்கக்கூடிய சொந்த வீடு கனவு நிறைவேற வாய்ப்புள்ளது. உடன் பிறந்தவர்கள் வழியில் உங்களுக்கு கிடைக்கும் ஆதரவு மூலமாக தொழில் அல்லது நல்ல உத்தியோகம் அமையும். மாணவர்களுக்குச் சிறந்த நிலையை அடைவார்கள்.

தனுசு

ஏழரை சனியின் கடைசி கட்டத்தில் இருக்கும் தனுசு ராசியினர், பெரியளவில் இருந்த பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருப்பீர்கள். இதுவரை இருந்த செயல் தடங்கல் நீங்கி எதிலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. இந்த முறையும் அலைச்சல் இருக்க வாய்ப்புள்ளது.

இருப்பினும் அதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அனுகூல பலன்கள் கிடைக்கும். வெற்றி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு கூடுதல் வெற்றியும், லாபமும் கிடைக்கும். அரசு அல்லது நீங்கள் எதிர்பார்த்த லைசன்ஸ், சான்றிதழ் வழியிலிருந்து உங்களின் தொழில், வியாபாரத்தை அடுத்த நிலைக்கு உயர்த்த பயன்படும். எதிர் பாலினத்தவர் மூலம் நன்மைகளை அடைவீர்கள்.

அந்த வகையில் திருமணமான தம்பதியினர் ஒருவருக்கொருவர் தங்களின் முன்னேற்றத்திற்கு உதவி செய்வதோடு, துணையின் முழு அன்பு, ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் மேன்மையான நிலையை அடைவீர்கள். சிலருக்கு வெளிநாடு வாய்ப்பு கிடைக்கும்.

 மகரம்

ஜென்ம சனி நடந்து கொண்டிருந்தாலும், ராசி நாதனாக இருப்பதால், இந்தாண்டு உங்களின் பொருளாதார நிலை மேன்மையானதாகத் தான் இருக்கும். நீங்கள் எதிர்பாராத வகையில் நல்ல வரவு இருக்கும்.

வருமானமோ, முதலீடோ பலவகையிலிருந்து உங்களுக்கு ஏற்றம் தரும் நிதி நிலை தான் இருக்கும். சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது. இதனால் குடும்பத்தில் ஆனந்தம் தவழும். சந்ததிகளுக்குச் சொத்துக்கள் சேர்த்து வைத்தல் நடக்கும். ஜென்ம சனி என்றாலும் பல அற்புத பலன்களை அனுபவிக்க உள்ளீர்கள்.

குறிப்பாக பெண்களுக்கு நிதி நிலை ரீதியாக ஆச்சரியமூட்டும் வகையில் முன்னேற்றத்தை அடைவீர்கள். அதன்மூலம் குடும்ப பாரத்தை குறைப்பீர்கள். படிப்பில் உற்சாகம் இருக்கும். விருது, பாராட்டு கிடைக்க வாய்ப்புள்ளது.

 கும்பம்

தமிழ் புத்தாண்டு பலன்கள் ஏழரை சனி நடந்து கொண்டிருக்கிறதே, ராசியில் குரு அமர்ந்திருக்கிறாரே என்ற குழப்பங்கள் வேண்டாம். நீங்கள் எதிர்பார்த்தத்டை விட மன மகிழ்ச்சி சிறப்பாக இருக்கும். பல வழியிலிருந்து ஏற்றம் தரக்கூடிய நிதி வளர்ச்சி, மதிப்பு, மரியாதை கிடைக்கும்.

சிலர் திடீர் முன்னேற்றத்தையும், சிலர் திடீர் பிரபலமாக வாய்ப்புள்ளது. தனித்துவமான செயல்களில் அல்லது துறைகளைத் தேர்ந்தெடுத்துள்ளவர்களுக்கு ஆச்சரியமூட்டும் முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.

பெண்களுக்கு ஆரோக்கியத்தில் ஏற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த தேக்க நிலைகள் எல்லாம் மாறி, லாபம் தரௌம் வகையில் உங்களின் விற்பனை இருக்கும். மாணவர்களுக்கு வெற்றியை அள்ளித்தரக்கூடியதாக இருக்கும்.

மீனம் 

சற்று கவனத்துடன் செயல்பட வேண்டிய ஆண்டாக இந்த பிலவ வருடம் இருக்கும். சட்ட விரோத செயலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அரசு வழியில் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. வம்பு, வழக்குகளில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்ப்பது அவசியம். வழக்கு விஷயங்களில் உங்களுக்கு எதிரான நிலை இருக்கும். அதனால் உங்களின் பெயர் கெட வாய்ப்புள்ளது.

நல்ல விஷயங்களுக்கு சற்று போராடி வெற்றி அடைவீர்கள். பெண்களுக்கு நற்பலன்களை குவிக்கக்கூடிய ஆண்டாக இருக்கும். குடும்பத்திலும், பணிச்சூழலும் சிறப்பாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. படிப்பில் உற்சாகமாக படிப்பீர்கள். உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குப் பல வழியில் முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். நினைத்த லாபம் கிடைக்கும். தொழில் விருத்தி ஏற்பட வாய்ப்புள்ளது.