பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமே உரியது இல்ல. மனிதனோ, எவ்வித ஜீவராசியோ தங்கள் குட்டி அவர்களுக்கு ரொம்பவே முக்கியமானது. அதை மெய்ப்பிக்கும்வகையில் ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது.

மிகவும் மென்மையான உயிரினமாகக் கருதப்படும் வாத்து ஒன்று ஒரு இடத்தில் போய் முட்டை போடுகிறது. அதை கவனித்துவிட்ட மலைபாம்பு ஒன்று முட்டையை விழுங்கும் நோக்கத்தோடு வாத்து முட்டைபோட்ட பகுதியை நோக்கி வருகிறது. தொடர்ந்து வாத்தை நெருங்கியதும், மலைபாம்பை ஆக்ரோஷமாகமாறி கொத்த பாய்கிறது வாத்து. ஆனால் அதனால் முடியாமல் தவிக்க நொடிப்பொழுதில் வாத்தை சுற்றிவளைக்கிறது மலைபாம்பு,

தொடர்ந்து முட்டைகளையும் குடிக்கும் நோக்கத்தில் மலைபாம்பு இருக்க அப்போது அங்குவந்த ஒரு பொடியன் அசால்டாக ஒரு கம்பில் மலைபாம்பை பிடித்து அகற்றிவிட்டு, வாத்தை காப்பாற்றுகிறார். தொடர்ந்து வாத்தையும், அதன் முட்டைகளையும் சேர்த்து விடும் அந்த சிறுவன் வாத்தைக் குஷிப்படுத்துகிறான். குறித்த அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பலரும் ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர்.