​குரு பகவான் ஏப்ரல் 5ம் தேதி முதல் செப்டம்பர் 13ம் தேதி வரை தற்போது சஞ்சரிக்கக்கூடிய மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு அதிசார பெயர்ச்சியாக சென்று திரும்ப உள்ளார்.

இதில் எந்த ராசி எல்லாம் அதிர்ஷ்ட பலனைப் பெறுவார்கள் என்பதை பார்ப்போம்.

மிதுனம்

ராசிக்கு 9ம் இடத்தில் குரு அமர்ந்திருப்பதும். குருவின் 5ம் பார்வை மிதுன ராசி மிது விழுவது விசேஷமானது.

அதோடு குருவின் 7ம் பார்வை ராசிக்கு 3ம் இடமான தைரிய ஸ்தானத்தையும், 9ம் பார்வையாக ராசிக்கு 5ம் இடமான பூர்வ, புண்ணிய ஸ்தானத்தைப் பார்த்து அருள உள்ளார்.

தற்போது அஷ்டம சனி நடந்து கொண்டிருப்பதோடு சனி பகவானுடன் சேர்ந்து குரு சஞ்சரித்துக் கொண்டிருந்ததால் பெரியளவில் குரு நற்பலனை வழங்க இயலாதவராக இருந்தார். இந்நிலையில் குரு கும்பத்திற்கு செல்வதால் அவரின் 5ம் பார்வை உங்கள் மீது விழுவதால் ஆரோக்கியம் சிறக்கும். முகம் பொழிவு பெறும்.

வண்டி, வகான சேர்க்கை உண்டாகும். செயலில் இருந்த தடுமாற்றங்கள் நீங்கி, எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். நிதி நெருக்கடிகள் நீங்கி, வளத்தைப் பெறுவீர்கள் என்பதால் கடன் தொல்லைகளிலிருந்து விடுபடக்கூடிய அற்புத காலமாக இருக்கும்.

வெளிநாட்டு வேலை, படிப்பு போன்றவற்றிற்கான முயற்சிகள் நிறைவேறும். வாழ்க்கை துணையுடனான பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சியாக வாழ்க்கை நகரும். குடும்பத்தில் உறவு பலப்படும்.

​சிம்மம்

கும்பத்தில் அமர்ந்திருக்கும் குருவின் 7ம் பார்வை சிம்ம ராசி மீது விழுகிறது. தற்போது குரு ராசிக்கு 6ம் இடமான மகரத்தில் நீச நிலையில் இருக்கிறார். அதனால் பெரியளவு நன்மை கிடைக்காத நிலை இருந்தது.

எதிலும் லாபம் அதிகமாக இருக்கும் என்பதால், அதை தகுந்த முறையில் சேமிக்க வேண்டிய வழிகளை முன்னெடுங்கள். உங்களின் செலவுகள் குறைந்து சேமிக்கும் மனப்பாங்கு ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும்.

உடல், மனம் சிறப்பாக ஒத்துழைப்பதோடு, குடும்பம், பணியிடத்திலும் நல்ல ஆதரவு ஏற்படும். இதனால் உத்தியோகம், தொழில் ரீதியாக உங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உங்களின் செயல் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.

பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. திருமணமான தம்பதியர் குழந்தை வரம் வேண்டி இருப்பவர்களுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது.

​துலாம்

குருவின் மிக விசேஷ பார்வையான 9ம் பார்வை துலாம் ராசி மீது விழுவதால் அற்புத பலன்களைப் பெறுவீர்கள்.

துலாம் ராசி மீது குருவின் அதிசார நிலையால் 9ம் பார்வை விழுகிறது. இதனால் துலாம் ராசிக்கு தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிரிகள் நீங்குவர். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் நினைத்தது போல உங்களின் முன்னேற்றம் அமையும்.

உங்கள் ராசிக்கு சிறப்பான பொருளாதார நிலை இருக்கும். வீடு, மனை வாங்கக் கூடிய சிறப்பான வாய்ப்பு உண்டு. விவசாய நிலங்கள் வாங்குவதற்கும், முதலீடுகளை செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது.

நீங்கள் நினைத்த வேலைகள் எல்லாம் மிக சிறப்பாக நிறைவேறும். உங்களின் ஆரோக்கியம் சிறப்பதால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வேலையை எளிதாக முடிப்பீர்கள்.

உங்கள் தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கக்கூடியதாக இருக்கும்.

தந்தை வகையில் அனுகூலங்கள் ஏற்படுவதோடு, தந்தையின் உடல் ஆரோக்கியம் சிறக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் நிதி சிக்கல் தீர்ந்து லாபம் ஏற்படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் ஏற்படும். முகம் பொழிவு பெறும். கடன் தொல்லை நீங்கி நற்பெயர் உண்டாகும்.

மீனம்

எந்த ஒரு செயலும் நீங்கள் நினைத்தது போல சிறப்பாக நிறைவேற வாய்ப்புள்ளது. வீடு, மனை வாங்கக்கூடிய யோகங்கள் உண்டாகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர வாய்ப்புள்ளது. தம்பதிகளின் இன்பம் அதிகரிக்கும்.

எதிரிகளின் தொல்லை மறையும். எதிரிகளே காணாமல் போக வாய்ப்புள்ளது. உங்களுக்கு தன லாபமும், அதிர்ஷ்டமும் ஏற்படும். உங்களுக்கு கல்வி, வேலை தொடர்பாக வெளியூர், வெளிநாடு, வெளி மாநிலம் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம்.

ஒட்டு மொத்தமாகச் சிறியளவில் சில சங்கடங்களும், அலைச்சல்களும் ஏற்படும்.