Home » தாயை பிரிந்து தவித்த குட்டியானை! தாய் மடியில் நிம்மதியாக உறங்கும் தருணம்… எப்படி நடந்தது?

தாயை பிரிந்து தவித்த குட்டியானை! தாய் மடியில் நிம்மதியாக உறங்கும் தருணம்… எப்படி நடந்தது?

by ftcnc
0 comment 526 views

தாயை பிரிந்து தவித்த குட்டியானை ஒன்று தாயின் மடியில் நிம்மதியாக புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கோவை மாவட்டத்தில் வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு யானைகள் வருவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் கடந்த 28ம் தேதி கூட்டமாக வந்த யானைகளில் குட்டி யானை மட்டும் தாயை பிரிந்து வழிதவறியுள்ளது. பின்பு வனத்துறையினர் குட்டியை பத்திரமாக மீட்டு ஆற்றுக்குள் குளிக்க வைத்து, 5 மணி நேர போராட்டத்திற்குப் பின்பு கடந்த 30ம் தேதி தாயுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

தற்போது வரை குட்டியானையின் நடவடிக்கைகள் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அப்போது குட்டியானை தேயிலை தோட்டம் அருகில் உள்ள ஒரு பாறையில், தாயின் மடியே சொர்க்கம் என்றபடி தனது தாயின் அரவணைப்பில் படுத்து நிம்மதியாக உறங்கும் காட்சிகளை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment