சிறு நீரகங்கள் சுத்தமாகி ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ இதை ஒரு முறை குடித்தால் போதும்..!!

2638

பெண்களின் ஆபாச வீடியோக்களை வைத்து அவர்களிடம் மிரட்டி பணம் பறித்த காசி வலையில் பிரபல நடிகரின் மகளும் சிக்கியுள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற 26 வயது இளைஞன், சென்னையில் உள்ள ஒரு காலேஜில் பிஏ படித்துள்ளார். படிப்பு முடிந்ததும், நாகர்கோவிலுக்கு காசி வந்துவிட்டார்.

அப்பா நடத்தும் கோழிக்கடையை காசி கவனித்து வந்துள்ளார், ஆனால் இவர் படிக்கும்போதிருந்தே பெண்களிடம் நெருங்கி பழகி உள்ளார். அந்த சமயங்களில் நெருக்கமாக இருக்கும் போட்டோ, வீடியோக்களையும் திருட்டுத்தனமாக எடுத்து வைத்து கொண்டு, நாளடைவில் பணம் கேட்டு அப்பெண்களை மிரட்டி வந்துள்ளார்.

இதில் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்முறையாக சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் காசி குறித்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்பிக்கு புகார் செய்யவும்தான் விடயம் வெளியே வந்தது. இதையடுத்து, கணேசபுரத்தில் உள்ள காசியின் வீட்டில் அவரது செல்போன், லேப்டாப், 2 ஹார்ட் டிஸ்க், 7 ஏடிஎம். கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

அதில் 100 பெண்களின் வீடியோக்கள் இருந்ததை கண்டு பொலிசார் அதிர்ந்தனர். இந்த விஷயத்தில் காசிக்கு 4 நண்பர்கள் உதவி செய்துள்ளனர்.

அவர்களையும் பொலிசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். சம்பந்தப்பட்ட நண்பர்களின் ஹார்டு டிஸ்க்குகளையும் ஆராய்ந்து வருகின்றனர். காசியால் ஏமாந்த பெண்கள் தைரியமாக புகார் அளிக்கலாம். அவர்களது ரகசியம் காக்கப்படும் என மாவட்ட காவல்துறை அறிவிக்கவும் பாதிக்கப்பட்டோர் ஒவ்வொருவாக புகார் தந்து கொண்டுள்ளனர்.

இதில் ஒரு நடிகர் மகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது, அவரிடம் லட்சக்கணக்கில் காசி ஏமாற்றி உள்ளார். தற்போது காசி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. பெண்களை ஏமாற்றியே காசி 4 அடுக்கு மாடி கொண்ட வீட்டை கட்டி உள்ளார்.

இதனிடையே, அதிமுக புள்ளிகள் சிலர் காசியிடம் நெருங்கி பழகி உள்ளனர். அதில் ஒரு அதிமுக புள்ளிக்கு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் ஹோட்டல்கள், ரிசார்ட்களும் உள்ளனவாம்.

நாகர்கோயிலில் இருந்து காரில் பெண்களை காசி இங்குதான் அழைத்து வருவாராம். இந்த ரிசார்ட், ஹோட்டல்களில் தங்க வைத்து மிரட்டிதான் ஆபாச படங்களையும் எடுத்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கிறார்கள்.

இதுதொடர்பான ஆதாரங்களும் கோழிப்பண்ணையில் சிக்கிய காசியின் லேப்டாப்டில் உள்ளதாக கூறப்படுகிறது.

காசி ஏமாற்றிய அந்த நடிகர் மகள் யார், தொடர்பில் இருந்த அந்த அதிமுக பிரபலம் யார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு இந்த விடயம் பெரித்து பூதாகரமாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.