குழந்தைகளுக்கு சளி பிடித்தால்…வியக்கவைக்கும் சீன வைத்தியம்..

438

இந்த ஜலதோஷம் இருக்கே மருந்து சாப்பிட்டா ஏழு நாளில் போயிடும். மருந்து சாப்பிடலைன்னா ஒரு வாரத்தில் போயிடும் என சந்திரமுகி திரைப்படத்தில் ரஜினிகாந்த் சொல்வது போலத்தான்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி பிரச்னை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் வாட்டி வதைக்கக் கூடியது. அதுவும் கடுங்குளிர் காலம் விட்டால் கேட்கவே வேண்டாம். குழந்தைகளுக்கு சளி பிடித்த உடனேயே தகுந்த சிகிட்சை அளிக்கவில்லை என்றால் வீசிங் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டுவிடும் அபாயம் உள்ளது.

குழந்தைகள் சளி பிரச்னையால் மிகுந்த சிரமத்துக்கு ஆவது தொடர்கதையாக உள்ளது. இதனாலேயே குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஓமவள்ளி, துளசி போன்ற மூலிகைகள் வளர்ப்பது வழக்கம். நம் முன்னோர் மரபிலும் குழந்தைகள் சளி பிரச்னையில் இருந்து தப்பிக்க பல வீட்டு வைத்திய முறைகள் உள்ளது.

ஆனால் சீனா நாட்டில் ஒரு வித்யாசமான முறையை பின்பற்றி வருகின்றனர். அதாவது சளி பிடித்த குழந்தையின் வலது மூக்கில் ஊசியில் நீர் நிறைத்து வேகமாக அழுத்தி விடுகிறார். அந்த தண்ணீர் வலது மூக்கில் வேகமாக அழுத்தப்பட்டதன் எதிர்வினையாக இடது மூக்கின் வழியாக தண்ணீர் திரும்ப வருகிறது.

அப்போது மூக்கில் தேங்கி இருக்கும் சளி யையும் இழுத்து வருகிறது. அதேநேரம் இது குழந்தைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இதை சீன மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

ஆனால் நம்மூரு மக்கள் இதைப் பின்பற்றும் முன்னர் உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது…