திருமணம் என்பது சந்தோசமான விசயம். அது இருமனங்களை மட்டும் இணைக்கும் விசயம் அல்ல. இரு குடும்பங்களையும் இணைக்கும் வைபோகம். திருமணம் என்னதான் சந்தோசமான விசயம் என்றாலும், பெண்ணின் கழுத்தில் தாலி ஏறும்வரை உச்சகட்ட பதட்டத்தில் மூழ்கி விடுகின்றனர் பெண்ணின் குடும்பத்தினர். அப்படி பதட்டத்தில் மணப்பெண்ணின் தாயார் செய்த செயல் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
அதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.. குறித்த க அந்த வீடியோவில் திருமண மேடையின் முன்பு அர்ச்சகர் மணமகளை தன் அம்மாவிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கச் சொல்ல திருமண பதட்டத்தில் இருந்த அம்மாவோ, தன்னைத்தான் அர்ச்சகர் சொல்வதாக நினைத்துக்கொண்டு தன் மகளின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.
இதைச்சற்றும் எதிர்பார்க்காத மணப்பெண் சற்று விலகிப் போய் நின்றுவிட்டாலும் அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதன் பின்னர்தான் தான் செய்த விசயத்தை உணர்ந்து தாயும் சிரிக்கத் துவங்கினார். இதை அங்கு இருந்த ஒருவர் தன் செல்போனில் வீடியோவாக எடுக்க அது இப்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்கள்..
பதட்டத்தில் பெற்ற மகளிடம் காலில் விழுந்நு ஆசி பெற்ற தாய். 😜😜 pic.twitter.com/5NOARfIx4F
— HBD MY PRINCESS 😍💃 / நல்ல நண்பன் 🔥 (@N4LLANANBAN) February 29, 2020