தொப்புளில் ஆரோக்கிய ரீதியில் யோசித்துப் பார்க்க வேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுகின்றது. மனித உடலில் இயற்கையாகவே இருக்கும் திறப்புகளில் ஒன்று தொப்புல்.

தொப்புளில் ஏற்படும் பாதிப்புகளை எளிதாக குணமாக்க சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

வேப்பிலை

வேப்ப மரத்தின் இலை, நல்ல கிருமி நாசினியாக, நோய் தொற்றை தடுப்பதாக பயன்படுகிறது. பாக்டீரியாவாக இருக்கட்டும், பூஞ்சையாக இருக்கட்டும், வேப்பிலை அவற்றை விரட்டி விடும்.

வேப்பிலையை நன்றாக பசை போன்று அரைத்து தொப்புளில் பாதிக்கப்பட்ட பகுதியில் பூசி வர, தொப்புள் தொற்று குணமாகி விடும். வேப்ப எண்ணெயையும் இதற்கு பயன்படுத்தலாம்.

உப்பு கரைசல்

உப்புக்கும் பாக்டீரியாவுக்கு எதிராக செயல்படும் தன்மை உண்டு. ஒரு டேபிள் ஸ்பூன் உப்பினை

அரை கப் வெதுவெதுப்பான நீரில் கரைத்து, தொற்று பாதிப்புள்ள பகுதியில் தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை போட்டு வர நல்ல குணம் கிடைக்கும்.

வினிகர்

வினிகரிலுள்ள அமிலத்தன்மை, பாதிக்கப்பட்ட தொப்புளிலிருந்து அசுத்தம் வெளியேறுவதை நிறுத்த உதவும். வினிகர் ஒரு பங்கு, வெள்ளை வினிகர் இரண்டு அல்லது மூன்று பங்கு கலந்து தொப்புளில் போட்டு 15 முதல் 20 நிமிட நேரம் கழித்து கழுவ வேண்டும். தினமும் மூன்று அல்லது நான்கு முறை இப்படி செய்து வந்தால் நல்ல பலன் தெரியும்.

கற்றாழை

சோற்றுக் கற்றாழை செப்டிக் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மை. சோற்றுக் கற்றாழையின் சதைப்பகுதியினை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட தொப்புளில் சாதாரணமாக பூசி வர விரைவில் குணம் பெறலாம்.

மஞ்சள்

மஞ்சளை நீரில் குழைத்து தொப்புளில் தடவி வந்தால், பாதிப்பு குணமாகும். வெது வெதுப்பான பாலில் மஞ்சளை கலந்து குடித்து வருவதும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.