Home » விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் வட்டமிட்ட கருடன்.. கைகூப்பி வணங்கிய மக்களின் மெய்சிலிர்க்கும் காட்சி

விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் வட்டமிட்ட கருடன்.. கைகூப்பி வணங்கிய மக்களின் மெய்சிலிர்க்கும் காட்சி

by ftcnc
0 comment 9.4K views

மறைந்த நடிகர் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தின் போது கருடன் வட்டமிட்டு வந்த காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

விஜயகாந்த் இறுதி ஊர்வலம்

நுரையீரல் அழற்சி காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் 28 -ம் திகதி காலை காலமானார். விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களுக்காகவும், அரசியல் தலைவர்களுக்காகவும் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

சென்னை தீவுத்திடலில் அவரது உடல் வைக்கப்பட்டது. அங்கு, ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், அங்கிருந்து சுமார் 3 மணி நேரம் பயணமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு அவரது உடலை இறுதி ஊர்வலமாக கொண்டு வந்தனர். அப்போது வழிநெடுக மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

வட்டமிட்ட கருடன்

இந்நிலையில், விஜயகாந்த் உடல் பயணித்த இறுதி வாகனம் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடந்து சென்றது. அப்போது வானத்தில் மூன்று முறை கருடன் வட்டமிட்டது.

இதனை பார்த்தவர்கள் கவனித்து சொன்னதும் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, அவருடைய இரு மகன்கள் உட்பட அங்கிருந்த மொத்த கூட்டமும் கருடனை கைகூப்பி வணங்கினர். இந்த காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

You may also like

Leave a Comment