குழந்தை வளர்ப்பில் அம்மா, அப்பா இருவருமே மிக முக்கியமானவர்கள். அதேநேரம் பிள்ளைகளுக்கு யார் மீது இஷ்டம் எனக் கேட்டால் பெரும்பாலான குழந்தைகளுக்கு அப்பா என்றால் கொள்ளைப் ப்ரியம் தான்.

அம்மாவிடம் கேட்டுக்கிடைக்காத சாக்லேட், பொம்மைகள் எல்லாம் அப்பா வாக்கிக் கொடுப்பார். அந்தவகையில் குழந்தைகளுக்கு அப்பா மீது எப்போதுமே கிரேஸ் அதிகம். அப்பா மீது ப்ரியம் கொண்ட குழந்தைகளின் கண்ணைத் தப்பி அப்பாக்கள் ஆபீஸ் போவதோ, அல்லது வீட்டை விட்டு வெளியே சென்று வருவதோ கூட பெரிய போராட்டம் தான்.

வீட்டைவிட்டு வெளியே செல்லும் அப்பாவிடம் வீட்டுக்கு வரும்போது அது வாங்கி வாங்க…இதை வாங்கி வாங்க என குழந்தைகள் பட்டியல் படிப்பதையும் பார்த்திருப்போம். இதோ இங்கேயும் அப்படித்தான். அப்பாக்களின் மீது அளவுகடந்த பிரியத்தோடு இருக்கும் குழந்தைகளின் வீடியோ இது. இதைப்பாருங்கள். உருகிப் போவீர்கள். அப்பா பாசம்ன்னா சும்மாவா?