Home » நடிகர் விஜய்க்காக கேப்டன் விஜயகாந்த் செய்த அந்த செயல் – அனைவரது பாராட்டிற்கும் காரணம் என்ன?

நடிகர் விஜய்க்காக கேப்டன் விஜயகாந்த் செய்த அந்த செயல் – அனைவரது பாராட்டிற்கும் காரணம் என்ன?

by ftcnc
0 comment 646 views

நடிகர் தளபதி விஜய்க்காக மறைந்த விஜயகாந்த் செய்த முக்கியமான செயல் ஒன்று ரசிகர்கள் மத்தியும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய்க்காக விஜயகாந்த் செய்த அந்த செயல்

கேப்டன் விஜயகாந்த் நடித்த “வெற்றி” என்ற படத்தின் மூலம் தளபதி விஜய் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதையடுத்து கேப்டன் விஜயகாந்த் நடித்த குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக தளபதி விஜய் தான் நடித்துள்ளார்.

பின் 1992 ஆம் ஆண்டு வெளியான “நாளைய தீர்ப்பு” என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக தளபதி விஜய் திரையுலகிற்கு அறிமுகமானார்.

கதாநாயகனாக அறிமுகமாகிய பின்னர் அவரது இரண்டாவது படமாக “செந்தூரப்பாண்டி” வெளியாகியது. அந்த திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்தும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

அவருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜயின் இரண்டாவது திரைப்படம் என்பதால், இந்த படத்தில் நடிப்பதற்கு விஜயகாந்த் சம்பளமே வாங்கவில்லையாம்.

அவருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜயின் இரண்டாவது திரைப்படம் என்பதால், இந்த படத்தில் நடிப்பதற்கு விஜயகாந்த் சம்பளமே வாங்கவில்லையாம்.

அந்த திரைப்படமானது வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கிறது.

எனவே விஜயகாந்த் மீது விஜய்க்கு எப்போதுமே தனிப்பட்ட மரியாதையும் அன்பும் இருகின்றது.

இந்த செயலானது ரசிகர் மத்தியில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.

மேலும் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment