தமிழ் பிக்பாஸ் சீசன் 4 முடிவடைந்துள்ள நிலையில், இந்த குரலுக்குச் சொந்தக்காரர் யார் என்ற குழப்பம் இன்னும் தீராத நிலையில் இருந்து வருகின்றது.

தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். தற்போது சீசன் 4 முடிந்துள்ள நிலையில் இந்த ஆண்டிற்குள் ஐந்தாவது சீசனை தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பல ரகசியங்களை வெளியிட்டிருந்தாலும், இந்நிகழ்ச்சியில் பிக்பாஸாக குரல் கொடுத்தவர் யார் என்ற ரகசியம் இன்னும் அவிழாமல் இருக்கின்றது.

ஆனால் சமீபத்தில் இவர் தான் பிக் பாஸ் குரல் கொடுப்பவர் என்று அவருடைய வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. இதனால் இவராகத்தான் இருப்பாரோ என்ற குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு தெளிவு படுத்தும் விதமாக பாலாவின் ட்விட் அமைந்துள்ளது.

ஆம் பிக்பாஸில் இரண்டாவது இடத்தினைப் பிடித்த பாலாஜி பிக்பாஸ் குரல் கொடுப்பவர் என்ற காணொளிக்கு கீழே என்ன அண்ணா எப்படி இருக்கீங்க? என்ற கேள்வியினை எழுப்பியுள்ளார்.

இதனை அவதானித்த ரசிகர்கள் அடுத்தடுத்து கமெண்ட் செய்து பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரரை பாலாவே கூறிவிட்டதாக கூறி வருகின்றனர்.