பணக்கஷ்டம் என்பது மனிதர்களாகிய அனைவருக்கு வருவது இயல்பு தான். அவ்வாறு வரும் கஷ்டத்தினை எவ்வாறு சரி செய்வது என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

பணக்காரர், ஏழை என்று வித்தியாசமின்றி எல்லோருக்கும் இந்த பணக்கஷ்டம் வருவது இயல்பே.. சில மனிதர்கள் அவர்களுக்கென்ன நிறைய பணம் வைத்திருக்கிறார் என்று கூறுவார்கள்.

இவ்வாறு ஒருவர் கூறிவிட்டாலே அந்த குறித்த நபரிடமிருந்து தானாகவே பணம் செலவழிய ஆரம்பித்துவிடுவது மட்டுமின்றி பணக்கஷ்டமும் வந்துவிடுமாம்!. இதற்கு கண் திருஷ்டியும் ஒரு காரணமாக இருக்கிறதாம்.

ஒருசில பழக்கங்களை நாம் முறையாக பின்பற்றி வந்தாலே இதனை மிக எளிதாக சரிசெய்துவிடலாமாம்… இதற்கு வெறும் ஐந்து மிளகு மட்டுமே போதும்.

இரவு 8 மணியளவில் ஐந்து மிளகினை கையில் எடுத்து மூடி வைத்துக்கொண்டு தங்களது தலையினை ஏழு முறை சுற்றிக் கொள்ள வேண்டும். அதன்பின்பு நான்கு சாலைகள் சேரும் இடத்தில் நடுவே நின்று கொண்டு தனது எல்லாக் கஷ்டங்களும் நீங்கிட வேண்டும் என்று ஒவ்வொரு மூலைக்கு ஒவ்வொரு மிளகை போட்டுவிட வேண்டுமாம்…

பின்பு இருக்கும் ஒரு மிளகை தான் நிற்கும் இடத்தில் தலைக்கு மேல் தூக்கிப்போட்டுவிட்டு வந்துவிட வேண்டுமாம்!… இதனை முறையாக செய்துவந்தால் நமக்கு வந்த பணக்கஷ்டம் மிக விரைவில் சரியாகிவிடுமாம்….