கடந்த 67 ஆண்டுகளாக குளிக்காமல் வாழ்ந்து வரும் ஹாஜி என்ற நபரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஹாஜி என்னும் முதியவர் உலகில் யாரும் செய்யாத ஒரு சாதனையை செய்துவிட்டார். இவருக்கு 87 வயது ஆகிறது.
67 ஆண்டுகளாக குளிக்காமலே வாழ்ந்து வருகிறார் இந்த மனிதர். தினமும் குளிப்பதை முக்கிய வேலையாக வைத்திருக்கும் நம்மாட்கள் பலருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.
இவர் ஈரானில் உள்ள கெர்மன்ஷா மகாணத்தில் உள்ள தேஜ்கா என்னும் கிராமத்தில் வசித்து வருகிறார். அவர் விவிலியத்தில் வரும் மோசேவை போல இருப்பதாக பலர் கூறுகின்றனர்.
அவர் குளித்தால் அதனால் அவருக்கு நோய் ஏற்படும் என அவர் நம்புகிறார் எனவே தான் அவர் குளிப்பதே இல்லை.
அழுகிய இறைச்சிகள் உண்டு வாழ்கிறார்!
இதில் இன்னும் அசாதரணமான விஷயம் என்னவென்றால் அவரது உணவுகள் தான். அவர் இறந்த விலங்குகளின் அழுகிய இறைச்சிகளைதான் உணவாக உண்கிறார். அதில் அதிகமாக முள்ளம்பன்றிகளை உண்கிறார்.
மேலும் அவர் புகை பழக்கத்தையும் விரும்புபவராக இருக்கிறார். ஆனால் அவர் புகைப்பதற்கு புகையிழையை பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக தனது துருபிடித்த புகைக்கும் குழாயில் விலங்குகளின் மலத்தை இட்டு அதை அவர் புகைக்கிறார்.
பூமி எவ்வளவு விசித்திரங்கள் நிறைந்ததாக உள்ளதோ அதே அளவு மனித வாழ்க்கையும் விசித்திரம் நிறைந்ததாக இருப்பதை காண முடிகிறது.
Amou Haji is the world’s dirtiest man because he hasn’t bathed in 60 years . He eats rotten eggs and smoke faeces out of a pipe. He believes that cleanliness brings him sick. #facts #mrfacts #dirty #weirdos pic.twitter.com/5kt20kfmZL
— MrFacts (@mrfactsofficial) December 19, 2020