முன்னோர்கள் காலத்தில் வீட்டில் யாராவது காணாமல் போனாலும் சரி, எதிர்காலத்தில் வரும் ஆபத்துகளை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தாலும் சரி வெற்றிலையில் மை தடவி கண்டிபிடித்துவிடுவார்கள். அதை எப்படி செய்தார்கள் என்று நாம் இப்போது பார்க்கலாம்.

ஜோதி ஒளி மரத்தின் வேர், பிசின், குங்குமப் பூ, புனுகு, பச்சை கற்பூரம் கஸ்தூரி மற்றும் கோரோசானை போன்ற அனைத்தையும் எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் ஜோதி மரப்பட்டை தைலம் சேர்த்து அரைத்து தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.

ஒரு மண் பாத்திரத்தில் ஒளி மரத்தின் வேரை சூடாக்கி கருப்பாக மாற்றி அதனுடன் மரத்தின் பட்டையை உலர்த்தி அதனுடன் குழித்தைலம் சேர்த்து அப்படியே வைத்து விட வேண்டும். சிறிது நாள்கள் கழித்து கருப்பு நிற மையாக இருக்கும்.

பின்னர் அந்த மையை எடுத்து அஞ்சனா தேவிக்கு உரிய மந்திரத்தினை 1008 முறை சொன்னால் தொலைவில் நடக்க இருப்பதை நாம் பார்க்க முடியும் என சித்தர்கள் கூறியுள்ளனர்.

அஞ்சனா தேவி மந்திரம்:-

ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் ஜம் க்லீம் நமோ பஹவதி அஞ்சனா தேவி மஹா சக்தி ஸெளம் க்லீம்

ஸர்வார்த்த ஸாதகி சர்வ ஜீவ தயாபரீ மமகார்யம் ஸாதயா ஹீபட் ஸ்வாஹா