கொ ரோ னாவால் பாதிக்கப்படுபவர்கள் நாளுக்கொரு அறிகுறியை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், புதிதாக நா க்கில் காணப்படும் ஒரு அறிகுறி மீது கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளார் பிரித்தானிய மருத்துவர் ஒருவர்.

கொ ரோ னாவுக்கென சில அறிகுறிகள் உள்ளன, அவற்றை வைத்துத்தான் முதலில் ஒருவருக்கு கொ ரோ னா இருக்கலாம் என்ற முடிவுக்கே வருவார்கள் மருத்துவர்கள்.

இப்போதைக்கு என்,ஹெச்.எஸ் மூன்று அறிகுறிகளைத்தான் கொ ரோ னாவின் அ றி கு றிகளாக கருத்தில் கொள்கிறது. கா ய்ச்சல், தொடர் இருமல் மற்றும் சுவை மற்றும் வாசனை அறியும் திறன் இழப்பு…

ஆனால், இப்போது கொ ரோ னா தொற்றிய சிலருக்கு இந்த அறிகுறிகள் இல்லாமல் போகின்றன, அதனால் கொ ரோ னா தொற்றியவர்களில் ஐந்தில் ஒரு பங்கினரை தவறவிடும் ஒரு சூழல் உள்ளது.

இதனால், தங்களுக்கு கொரோனா இருப்பது தெரியாமலே அவர்கள் மற்றவர்களுக்கு கொ ரோ னாவைப் பரப்பும் ஒரு அபாயமும் உள்ளது.

பிரித்தானியாவில் கொ ரோ னா நிலைமையை கண்காணித்துவரும் தொற்றுநோயியல் நிபுணரான லண்டன் King’s College பேராசிரியரான Tim Spector, தான் கொ ரோனா நோயாளிகளிடம், வழக்காக இல்லாத புதிய ஒரு அறிகுறியை கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

கொ ரோ னா நோயாளிகளின் நா க்கில் பு ண் கள், நாக்கு வீ ங் குதல் மற்றும் வழக்கத்துக்கு மாறான வா ய் ப்புண் ஆகியவை காணப்படுவதை தான் கவனித்துள்ளதாக பேராசிரியர் Spector தெரிவிக்கிறார்.

ஆகவே, காய்ச்சல், தொடர் இருமல் மற்றும் சுவை மற்றும் வாசனை அறியும் திறன் இழப்பு ஆகிய அறிகுறிகளுடன், இந்த நாக்கில் ஏற்படும் மாற்றத்தையும் கருத்தில் கொள்ளுமாறு பேராசிரியர் Spector என்,ஹெச்.எஸ்சை வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்களைப் பொருத்தவரை, தலைவலியும் தலை சுற்றலும் வந்தால் கூட வீட்டுக்குள்ளேயே இருங்கள் என்கிறார் அவர்.