சின்ன, சின்ன சர்ப்ரைஸ்கள் தான் நம் வாழ்க்கையை மிகவும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவுகிறது. சர்ப்ரைஸ் இல்லாமல் சதா சர்வநேரமும் உழைத்துக்கொண்டே இருந்தால் வாழ்க்கை சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும். அந்த வகையில் இங்கே ஒரு கணவர் தன் மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ் வாரே வாவ் ரகம் தான்.

இளம் ஜோடி தம்பதிக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் தான் ஆகிறது. மனைவிக்கு ஒரு மாத அன்வர்சரிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க கணவர் ஒரு செம பிளான் செய்துள்ளார். பைக்கில் போய்க் கொண்டு இருக்கும்போதே சாலையில் ஒரு டிராவல்ஸ் பஸ் செல்கிறது. அதை முந்திச் சென்று பிரச்னை செய்கிறார். டிரைவருடன் வாக்குவாதத்திலும் ஈடுபடுகிறார். டிரைவரும் அந்த வாலிபரைத் திட்டுகிறார். தொடர்ந்து அந்த வாலிபர், டிரைவர் சீட்டின் பக்கத்தில் இருக்கும் கதவைத் திறந்துகொண்டு உள்ளே செல்கிறார். உடனே டிரைவர், பஸ்ஸுக்குள் போகாதே எனக் கத்துகிறார்.

இதைக்கேட்ட அவரது மனைவி அதிர்ச்சி விலகாமல் சாலையில் நிற்கிறார். உடனே டிரைவர், அந்த பெண்ணிடம் ‘அம்மா..உன் வீட்டுக்காரர் பஸ்ஸூக்குல் போறாரு. போய் கூப்பிடும்மா..’’ன்னு சொல்ல அந்த பெண்ணும் கதவைத் திறந்து பஸ்ஸுக்குள் செல்கிறார். அதன் பின்னர் தான் சிறப்பான தரமான சம்பவம் அவருக்கு காத்திருக்கிறது. உள்ளே பலூன், பொம்மை, வாழ்த்து அட்டை, திருமண போட்டோ என ஒரு டீமே செம டெக்ரசன் செய்து காத்து இருக்கிறார்கள். உள்ளே ஆட்டம், கொண்டாட்டம், பஸ்ஸுக்கு வெளியே வான வேடிக்கை என மனைவிக்கு ஒரு மாத அன்வர்சரியை செம ஷாக்கிங் பிளஸ் சர்ப்ரைஸ் ஆக்கிவிட்டார் இந்தக் கணவர். இதோ இந்த வீடியோவைப் பாருங்கள். அசந்துபோய் விடுவீர்கள்.