பிக்பாஸ் வீட்டுக்குள் அர்ச்சனா, நிஷா, ரேகா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகிய நால்வரும் ரீ-எண்ட்ரி கொடுத்தனர்.

இன்னும் சில நாட்கள் தாங்கள் இங்கே இருக்க போவதாக அர்ச்சனா தெரிவித்து இருக்கிறார்.

இதையடுத்து அனிதா, சனம் ஆகியோர் எப்போது எண்ட்ரி கொடுப்பார்கள்? என அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று எண்ட்ரி கொடுத்த பழைய போட்டியாளர்கள் ஆரியிடம் அதிகம் பேசவில்லை என ரசிகர்கள் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விதிவிலக்காக நிஷா-ஆரி உரையாடும் சில காட்சிகள் ஒளிபரப்பாகின. அதில் சரியோ, தப்போ நான் இப்படியே இருந்துக்கறேன். என்மேல என்ன மிஸ்டேக்னு வெளில போய் பாத்துக்கறேன் என ஆரி கூறினார்.

இதை சொல்லும்போது அவர் உடைந்து அழுக நிஷா அவருக்கு ஆறுதல் கூறினார். இன்னும் சில நாட்களில் இறுதிப்போட்டி நடைபெற இருப்பதால் சமூக வலைதளங்களில் ஆர்மிக்காரர்களின் மோதல் அதிகமாக உள்ளது.