சாலையில் தன் கன்றுக்குட்டி அ டி பட, தாய் பசு செய்த செயல் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பொதுவாகவே வீட்டில் பசு மாடு இருப்பது அதிர்ஷ்டம் என சொல்வார்கள். அதனால் தான் பசுவை கோமாதா எனச் சொல்கிறோம். பசு மாடு மிகவும் பாசமாக பழகக் கூடியதுகூட. மனிதர்களோடு நெருக்கமாக இருக்கும் பிராணிகளில் முதன்மையானது மாடு. டீ, காபி என எதைக் குடித்தாலும் அதற்கு மூலப்பொருளான பாலைக் கொடுப்பதால் பசு நமக்கு அன்னமிடும் விலங்கும் கூட. சரி இங்கே விசயத்துக்கு வருவோம்

ஒடிசா மாநிலத்தின் மல்கான்கிரி பகுதியில் சாலையில் பசு தன் கன்றுக்குட்டியோடு போய்க் கொண்டு இருந்தது. அப்போது திடீரென அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று கன்றுகுட்டியின் மீது பலமாக மோ தி யது. உடனே அக்கம், பக்கத்தினர் ஒரு ரிக்‌ஷாவில் க ன்றுக்கு ட்டியை ஏ ற்றிக்கொண்டு போய் அருகில் உள்ள்ச கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

. அப்போது பாசமிகுதியில் அந்த தாய் பசு, தன் கன்றுக்குட்டியை ஏற்றிச் சென்ற ரிக்‌ஷாவின் பின்னாலேயே ஓடியது. மருத்துவமனை வரை பசுமாடு ஓடியே சென்றது தாய்பாசத்தின் உச்சம் என்றே சொல்லலாம். இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.