மலையாள சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் மோகன்லால். லால் ஏட்டன் என இவர் கேரள மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இயல்பான கதைக்களம் கொண்ட படங்கள் தான் மலையாள சினிமாவின் ஆனிவேர். அதில் லால்மோகன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துவார். நடிப்பை தேர்ந்த முறையில் வெளிப்படுத்தும் மோகன்லால் தான் மலையாளத் திரையுலகில் அனைவரும் கொண்டாடும் நடிகர்.

ஜில்லா திரைப்படத்தில் இளையதளபதி விஜயின் தந்தையாக செம பெர்பாம் செய்து இருப்பார் லால் ஏட்டன். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகர் மோகன்லாலுக்கு சுசித்ரா என்ற பெண்ணோடு கடந்த 1988 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிரணவ் என்ற மகனும், விஸ்மா என்னும் மகளும் உள்ளனர். மோகன்லால் மகள் இதுவரை எந்த பொதுநிகழ்ச்சியிலும் தலைகாட்டியது இல்லை. இதனால் பலருக்கும் அவரைத் தெரியாது.

மிகக் குண்டாக இருக்கும் இருப்பார் விஸ்மா. இந்நிலையில் செமையாக ஒர்க் அவுட் செய்து தன் டல் எடையை 22 கிலோ குறைத்து மேஜிக் செய்திருக்கிறார் மோகன்லால் பொண்ணு. குறித்த அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.